எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்.. மத்ததெல்லாம் இலவசம்.. RBI அதிரடி!!!

Friday, August 16, 2019




பணமில்லா பரிவர்த்தனைகளான வங்கிக் கணக்கில் மீதமுள்ள தொகை பார்ப்பது, காசோலை புத்தகம் கோருவது, வரிகளை செலுத்துவது, நிதி பரிமாற்றம் செய்வது ஆகியவை இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையங்களில் மாதந்தோறும் 5 முறையும் மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதந்தோறும் 3 முறையும் கட்டணமில்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கூடுதலாக செய்யும் நிதி பரிவர்த்தனைக்கு 17 ரூபாயும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.6-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. சர்வதேச பரிவர்த்தனைகள் என்றால் பேலன்ஸ் சரிபார்க்க மட்டும் 17 ரூபாய் கட்டணம், பணம் எடுத்தால் 169 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்ற விதி கடந்த ஜனவரி மாதம் முதல் விதிக்கப்பட்டது.

இதை வாடிக்கையாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். தங்கள் பணத்தை எடுப்பதற்கு கட்டணம் ஏன் செலுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர். இந்த 5 முறை பரிமாற்றத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கோளாறு, பணம் இல்லாமல் இருக்கும்போது செய்யப்படும் பரிமாற்றமும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அது இலவச பரிவர்த்தனைகளின் கீழ் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஆர்பிஐ வழங்கியுள்ளது. எனவே இலவச பணபரிமாற்றத்தை இனி முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதாவது வங்கி தரப்பிலோ, வாடிக்கையாளர் தரப்பிலோ தோல்வி அடைந்த பரிவர்த்தனைகள், பணபரிமாற்றம் அல்லாத சேவைகளான வங்கிக் கணக்கில் பேலன்ஸ் தெரிந்து கொள்ளுதல், காசோலை புத்தகம் கோருவது, வரி செலுத்துவது ஆகியவற்றை இனி இலவச பரிவர்த்தனையில் சேர்க்கப்படாது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One