எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

5 கி.மீ., சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றுவர இலவச வாகனம்: அரசு திட்டம் துவக்கம்

Friday, August 30, 2019




பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் அரசு செலவில் மாணவர்களை வாகனத்தில் அழைத்து வரும் திட்டம் சிவகங்கையில் துவக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் இணைப்பு திட்டத்தால் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்லாமல், இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில், 5 கி.மீ., சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றுவர ஏதுவாக, இலவச வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மாவட்டத்தில் பரிட்சார்த்தமாக காளையார்கோவில் ஒன்றியத்தில் காளையார் மங்கலம், மானாமதுரை ஒன்றியத்தில் வேதியரேந்தல், கண்ணங்குடி ஒன்றியத்தில் மங்கலம் ஆகிய இடங்களில் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏற்படுத்தியுள்ளனர்

இதற்காக மாதம் ஒரு மாணவருக்கு 500 முதல் 600 ரூபாய் வரை அரசு வழங்குகிறது. காளையார்மங்கலத்தில் நடந்த விழாவிற்கு ஒருங்கிணைந்த கல்வி திட்ட மேற்பார்வையாளர் பிளோரா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் இந்திராணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெயா வரவேற்றார். ஆசிரியர்கள் சகாயதிரவியம், கோபிகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One