இதில் இருக்கும் முக்கியமான சிக்கல் நம் நாட்டின் மக்கள் தொகை. பின்லாந்தை விடவும் சுமார் 40 மடங்கு மக்கள் தொகை கொண்டது நம் நாடு. ஆனாலும் அரசியல்வாதிகள் நினைத்தால் சாத்தியம்தான். அதற்கு அரசு முன் வரவேண்டும்.
ஏனெனில், பின்லாந்து ஜிடிபியில் 24 சதவிகிதம் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது; ஆனால், நம் நாட்டில் 3 சதவிகிதம் மட்டும்தான்.
இதை 6 சதவிகிதமாக மாற்றுவதற்கு கோத்தாரி வைத்த கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. தற்போது வெளியான தேசியக் கல்விக் கொள்கை வரைவில் ஜிடிபி 6 சதவிகிதம் பயன்படுத்த தனியாரைக் கல்வியில் ஈடுபடுத்தச் செய்ய வேண்டும் என்றுதான் திட்டமிடுகிறது அரசு.
அடுத்து, பெற்றோரின் மனநிலை மாற வேண்டும். ஏனெனில் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் பிரிலியன்ட் என்று இவர்கள் நினைக்கிறார்கள். திறன்களைக் கற்றுக்கொள்வதும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதுமே பிரிலியன்ட் மாணவருக்கான அடையாளம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஹோம் வொர்க் அதிகம் கொடுக்கும் பள்ளியே சிறந்த பள்ளி என்ற மனப்பான்மையிலிருந்து வெளியே வர வேண்டும். பெற்றோர்களைப் போலவே சமூகம், திறமை உள்ள மாணவர்களைப் பாராட்டுவதற்கு முன் வந்தால் மட்டுமே இங்கே பின்லாந்து கல்வி முறை சாத்தியமாகும். ஏனெனில், பின்லாந்து கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டு ஜெ.கிருஷ்ணமூர்த்தி கல்வி நிலையங்கள் இயங்கின. ஆனால், அரசு இம்முறையைக் கையிலெடுத்து மாற்றும்போதே முழுமையான பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment