தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பந்தல் மண்டபம் அருகில் உள்ளது சரவணய்யர் நடுநிலைப்பள்ளி.கடந்த 1895-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி தான் திருச்செந்தூரில் தொடங்கப்பட்ட முதல் பள்ளி.விரைவில் 125-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இப்பள்ளியில் மொத்தம் 210 மாணவர்கள் படிக்கிறார்கள்.
govt school
பொதுவாக பள்ளிகளில் சுதந்திர தின விழா என்றால் தலைமை ஆசிரியர், தாளாளர், தியாகிகள் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.ஆனால் இப்பள்ளியில் புதுமையாக 8-ஆம் வகுப்பு முடித்த, தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசிய கொடி ஏற்ற வைத்து மரியாதை செய்கிறது பள்ளி நிர்வாகம்.இது குறித்து தாளாளர் திரு.ராமச்சந்திரன் அவர்களிடம் கேட்ட போது "இன்றைக்கு 73-வது சுதந்திர தினம்.கடந்த ஆண்டு எங்க பள்ளியில் படித்து இளம் விஞ்ஞானி விருது பெற்ற ஜெயராம வர்ணா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு தேசிய கொடியை ஏற்றினார்.
மாணவிக்கு அப்துல் கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகம் பரிசளிக்கப்பட்டது. ஒவ்வொரு வருஷமும் அரசு திறனாய்வு தேர்வு நடத்திட்டு வர்றாங்க.இதுல தேர்ச்சி பெறுவது கஷ்டம்.தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு அரசு மாதம் ரூ.500 வீதம் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.24,000 வரை உதவித்தொகை கொடுக்குறாங்க.எங்க பள்ளியில இந்த தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துறோம்.
இதன் மூலமா கடந்த 3-வருஷத்துல 24 பேர் இந்த தேர்வுல தேர்ச்சி பெற்றுருக்காங்க.மாணவி ஜெயராம வர்ணா இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் மாவட்ட அளவில் 5-ஆம் இடம் பிடித்து இளம் விஞ்ஞானி விருது பெற்றுருக்காங்க. இதன் மூலமா மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி இருக்காங்க. இளம் வயதில் சாதனை படைத்த மாணவர்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அழைத்து ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான தலைமை பண்பு வளர்வதுடன் சாதிக்கும் எண்ணமும் உருவாகிறது" என்றார்.
congratulations
ReplyDelete