எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஏடிஎம் கார்டுகளுக்கு பதிலாக 'யோனோ'! பாரத ஸ்டேட் வங்கி புதிய திட்டம்

Wednesday, August 21, 2019




பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஏடிஎம் டெபிட் கார்டுகளை ரத்து செய்ய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து ஏடி.ம் எந்திரங்களிலும் யோனோ வசதி கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினிஸ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள ரஜினிஸ் குமார், நாடு முழுவதும் சுமார் 3 கோடி எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளும், 90 கோடி டெபிட் கார்டுகளும் உள்ளதாகவும், தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகி உள்ளதால், பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கம் வகையில், ஏடிஎம், டெபிட், கிரெடிங் கார்டுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளர்.

இதற்கு பதிலாக புதுவகையான யோனோ என்ற தளம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் பெறும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இது முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

யோனா வசதியை பெற, ஷயோனோ' கேஷ் அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் உள்ள 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்கி பணம் எடுக்கலாம் என்றவர், பணம் எடுக்க வேண்டும் என்றால் யோனோ அப்ளிகேசன் மூலம் பதிவு செய்யப்பட்ட செல்லிடை பேசி நம்பருக்கு ஒரு எண் அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஏ.டி.எம்களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்டை எண்ணை பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

தற்போது இந்த வசதி நாடு முழுவதிலும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம்களிலும் இந்த வசதி கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One