ஓய்வூதியம் பற்றி அறிக்கை சமர்ப்பித்து 10 மாதமாகியும் வல்லுநர் குழு அறிக்கை மீது நடவடிக்கை இல்லை
பரிதவிப்பில் அரசு ஊழியர்கள்
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை அளித்து 10 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லாததால், அரசு ஊழியர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் 2003 ஏப்.1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை விதிமுறைப்படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை.
இதனால் ஓய்வுபெற்றவர்களுக்கும், பணியின் போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் முறையாகப் பணப் பலன்கள் கிடைக்கவில்லை.
No comments:
Post a Comment