எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்களுக்கான கலைப் போட்டிகள்

Tuesday, August 27, 2019




ஆக.29ல் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட கலைப் போட்டிகள், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குரலிசை, பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் ஆகிய பிரிவுகளில் நடைபெறுகின்றன. குரலிசை, பரத நாட்டிய போட்டிகள் நடைபெறும். இதில் 5 முதல் 8 வயதுவரை 9 முதல் 12 வயதுவரை மற்றும் 13 முதல் 16 வயதுவரை என 3 வயதுப் பிரிவுகளில் நடக்கும். குரலிசை போட்டியில், மாணவ, மாணவியர் தனியாக குரலிசை பாட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 5 நிமிடம் அனுமதிக்கப்படும். இசையை முறையாகப் பயின்றவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் தமிழ் பாடல்கள், தேசபக்தி பாடல்கள் பாட வேண்டும்..பரதநாட்டியம் முறையாக பயில்வோர் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 5 நிமிடம் அனுமதிக்கப்படும்.

குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்தி கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்யவேண்டும்.

ஓவியப் போட்டியில் 40 X 30 செ.மீ அளவுள்ள ஓவிய தாள்களையே பயன்படுத்தவேண்டும். பென்சில், கிரையான் வண்ணங்கள் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். வண்ணங்கள், தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தத்தம் பள்ளிகளில் இருந்து பிறந்த தேதி/ வயதுக்கான சான்றினை எடுத்து வர வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விவரங்கள் தொலைபேசியில் தெரிவிக்கப்படும். மேலும் மாவட்டப் போட்டிகளில் முதல் , 2ம், 3ம் பரிசு வென்றவர்களுக்கு பின்னர் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். போட்டிகளில் 9- 12, 13- 16 வயதுப் பிரிவுகளில் முதல் பரிசு பெறும் சிறார்கள் மாநிலப் போட்டிக்கு அரசு சார்பில் அனுப்பிவைக்கப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு, மண்டலக் கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், சதாவரம், ( காது கேளாதோர் பள்ளி அருகில்), காஞ்சிபுரம், தொலைபேசி .044-27269148 / 27268190 தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One