*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*
21-08-2019
*இன்றைய திருக்குறள்*
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
*குறள்-106*
பொருள்:
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
✡✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில் நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள்.
✳✳✳✳✳✳✳✳
*பழமொழி மற்றும் விளக்கம்*
*அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.*
நாம் அறிந்த விளக்கம் :
வன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்க கூடும் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவ்விதமே இன்று வரை விளக்கப்பட்டு கொண்டிருக்கிற பழமொழி இது. ஆனால் இது உண்மையான விளக்கம் அல்ல.
விளக்கம் :
இந்த பழமொழியில் அடி என்பது இறைவனின் திருவடியை குறிக்கிறது. துன்பங்கள் நேரும்போது எல்லாம் அவனே என இறைவனை நினைத்துக் கொண்டோர்க்கு எவ்வித துன்பமுமில்லை. அந்த இறைவனின் அருள் உதவுவது போல் யாரும் உதவ முடியாது என்பதை குறிக்கும் விதமாகவே சொல்லப்பட்ட பழமொழி இது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1) அணுக்கரு இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
எர்னஸ்ட் ரூதர்போர்டு
2) காகிதத்தை முதன் முதலில் கண்டுபிடித்த நாடு எது?
சீனா
📫📫📫📫📫📫📫📫
*விடுகதை*
1. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன். ஆனால் நீரை கொடுத்தால் இறந்து விடுவேன். நான் யார்?
*நெருப்பு*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
*Important Words*
Phyllenthus நெல்லிக்காய்
Pine Apple அன்னாசிப்பழம்
Plantain (பெரிய) வாழைப்பழம்
Plum சீமை இலந்தை
Pomegranate மாதுளம்பழம்
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
புதிர் கதை
*குளம் நிரம்பும் கதை*
ஒரு குளத்தில் உள்ள தாமரைப்பூ ஒவ்வொரு நாளும் தன்னுடைய மடங்கை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது. 30 நாளில் அந்த குளம் முழுவதும் தாமரைப்பூக்களால் நிரம்பி வழிகிறது எனில் எத்தனை நாட்களில் தாமரைப்பூக்கள் பாதி குளத்தை நிரப்பி இருக்கும் ?
விடை:
29 நாட்களில் பாதி குளம் நிரம்பியிருக்கும்.
தாமரைப்பூ ஒவ்வொரு நாளும் தன்னுடைய மடங்கை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது என்பதால் 29 நாட்களில் பாதி குளம் நிரம்பினால் 30 வது நாளில் இரட்டிப்பாகி முழு குளமும் பூக்களால் நிரம்பியிருக்கும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*தொகுப்பு*
T. THENNARASU,
R.k.PET BLOCK,
THIRUVALLUR DT.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*செய்திச் சுருக்கம்*
🔮ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை.
🔮இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.
🔮டெபிட் கார்டு பயன்பாட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வந்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.
🔮காற்றின் சங்கமத்தால் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு, வானிலை மையம்.
🔮 Chandrayaan 2: India’s second moon missionChandrayaan-2 successfully inserted into Lunar orbit.
🔮A formal order that will remove the bottlenecks in the way of using the facilities by private entities will be issued, says Rajnath Singh.
🔮SBI aims to eliminate debit cards to promote digital payment.
🔮North India rains: Yamuna flowing above danger level as water level further rises.
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
Super sir
ReplyDelete