எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

School Morning Prayer Activities -28-08-2019

Tuesday, August 27, 2019


*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*

28-08-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள் எண்- 476*

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
 உயிர்க்கிறுதி ஆகி விடும்.

✍மு.வ உரை:

ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

✍ கருணாநிதி  உரை:

தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

✍சாலமன் பாப்பையா உரை:

ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால்,  அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.


*பொன்மொழி*

நமது குற்ற உணர்வுகளை நம் கண் முன்னே நிறுத்தும் கணக்கு புத்தகம் தான் நம் மனசாட்சி ஆகும்.

    _அப்துல் கலாம்


*பழமொழி மற்றும் விளக்கம்*

*ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது*

நாம் அறிந்த விளக்கம் :

ஆமை என்ற உயிரினம் வீட்டுக்குள் வந்து விட்டால் அந்த வீடு அழிவை நோக்கி போகும் அல்லது கெடுதல்கள் நிகழும். அமீனா என்பவர் நீதி மன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி (டவாலி என்பார்கள்). நீதிமன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம் நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டுக்கு அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர். எனவே அவர் வீட்டுக்கு வந்தால்; ஏதோ கெட்ட செய்திதான் கொண்டு வருவார் என்பதற்காக மேற்சொன்ன பழமொழி விளக்கம் தருகிறது.

விளக்கம் :

இந்த பழமொழியில் ஆமை எனும் சொல் மூன்று விதமான ஆமைகளை உணர்த்துகிறது. கல்லாமை இயலாமை முயலாமை. அதாவது கல்வி இல்லாத சோம்பேறித்தனம் கொண்ட, முயற்சிகளற்ற தன்மைகள் எந்த வீட்டில் உள்ளனவோ அந்த வீடு முன்னேறாது என்பதை இப்பழமொழி அறிவுறுத்துகிறது. அடுத்து இரண்டாம் பாதியாக உள்ள அமீனா புகுந்த வீடு என்பது ஒரு எதுகை மோனைக்காக சேர்க்கப்பட்டது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.



*Important  Words*

 Mad பைத்தியம்

 Pus சீழ்

 Dysentry சீதபேதி

 Thirst தாகம்



*பொது அறிவு*

1) சாரநாத் இரும்புத்தூண் எழுப்பியவர் யார்?

*அசோகர்*

2)பாம்பன் பாலம் உள்ள இடம் எது?

*இராமேஸ்வரம்*


*விடுகதை*

1.வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை
கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை
வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்?

*சிலந்தி*

2. கருப்பு நிறமுடையவன்,
கபடம் அதிகம் கொண்டவன்,
கூவி அழைத்தால் வந்திடுவான்,
கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?

*காகம்*


*இன்றைய கதை*

*அகத்தின் அழகு முகத்தில் தெரியும்*

பாரசீக மன்னர், பீர்பாலை தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அனுப்பி வைக்கும்படி அக்பருக்கு ஒரு ஓலை அனுப்பினார்.

அக்பரும், பீர்பாலை பாரசீக மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க, பாரசீக நாட்டிற்கு பரிசு பொருட்களுடன் அனுப்பி வைத்தார். பீர்பாலும், பாரசீக நாட்டிற்கு பரிசுப்பொருள்களுடன் சென்றார்.

பீர்பாலின் அறிவாற்றலை சோதித்துப்பார்க்க விரும்பிய பாரசீக மன்னர், ஒரே மாதிரியான தோற்றமுடைய ஐந்து நபர்களை அரசர் அமரக்கூடிய ஆசனம் ஐந்திலும், அரசர்கள் போன்று அமர வைத்தார்.

பீர்பால், பாரசீக மன்னரைச் சந்திக்கப்போவது இது தான் முதல் முறை. அதனால் பீர்பால் மன்னரை சந்திக்க ஆவலுடன் அரசவைக்குச் சென்றார்.

பீர்பால், ஒரே மாதிரியான தோற்றமுடைய ஐந்து பேர்களை, அரசர் அமரும் ஆசனங்கள் ஐந்தில், அரசர்கள் போன்று அமர்ந்திருப்பதைப் பார்த்து பீர்பாலுக்கு மிகவும் ஆச்சர்யமாகி விட்டது. இந்த ஐவர்களில் யார் அரசராக இருக்க முடியும் என்று யோசனை செய்தபடி நின்றிருந்தார்.

பின்னர் ஐந்து பேர்களையும் நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு மிகப் பணிவுடன் அரசர் அமர்ந்திருந்த ஆனசத்தின் அருகே சென்று, மேன்மை மிகு பேரரசே! தங்களைப் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறி மன்னர் கொடுத்தனுப்பிய பரிசுப் பொருட்களை பாரசீக மன்னரிடம் அளித்தார் மாமேதை பீர்பால் அவர்கள்.

பீர்பாலைப் பார்த்து, எப்படி நான்தான் மன்னர் என்பதை அறிந்து கொண்டீர்கள்?என வினவினார். மேன்மைமிகு மன்னர் பெருமானே! இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நான்கு பேர்களின் கண்களும் தங்களின் மீதே பதிந்திருந்தது. தாங்கள் மட்டுமே அரசர்களுக்கான கம்பீரமான பார்வையுடன் அமர்ந்து என்னை நேருக்கு நேராகப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டுதான் அமர்ந்திருந்த ஐவரில் தாங்கள் தான் அரசர் என்பதை அறிந்து கொண்டேன் என்றார்.

என்னதான் நாம் போலியாக நடித்தாலும் நம்முடைய செயல்கள் முகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் என்றார் பீர்பால்.

பீர்பாலின் பேராற்றலைப் பாராட்டி பாரசீக மன்னர் பரிசுகள் வழங்கி, சில நாட்கள் அரச விருந்தினராக இருக்கச் செய்து, டில்லிக்கு அனுப்பி வைத்தார் .

நீதி :

என்ன தான் மாறுவேடம் போட்டாலும் உன் உண்மையான தோற்றம் உன் முகத்தில் தெரியும்.


*தொகுப்பு*

T. தென்னரசு,
இரா.கி.பேட்டை  ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

*செய்திச் சுருக்கம்*

🔮அமெரிக்க நிறுவனம் நடத்திய பொது அறிவுப் போட்டியில் வெற்றி; நாசாவுக்கு செல்லும் தமிழக மாணவி.

🔮திருப்புவனம் அருகே கீழடி அகழ் வாராய்ச்சியில் குளியல் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

🔮சந்திராயன்-2 எடுத்திருந்த நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு!

🔮சென்னை போல் கோவை, மதுரையிலும் மின்சார பேருந்து.. அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!

🔮அமேசான் காடுகளை பாதுகாக்க லியோனார்டோ டி காப்ரியோ ரூ.35 கோடி நிதி

🔮டெல்லி பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் 'அருண் ஜெட்லி' மைதானம் எனப் பெயர் மாற்றம்.

🔮சந்திரயான்-2 : மிகப்பெரும் சாதனை - நாசா முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டு.

🔮Tamil Nadu rolls out Amma Patrol Vehicles for safety of women, kids.

🔮Delhi's Feroz Shah Kotla Stadium to be renamed as Arun Jaitley Stadium.

🔮Athlete creates history by becoming first man to paddleboard 2,700 miles across Pacific Ocean.

🔮ICC Test Rankings 2019: Jasprit Bumrah breaks into top ten, Virat Kohli holds spot.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One