எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பிளஸ் 1, பிளஸ் 2 முதலாம் பாடப்பிரிவு நீக்கம் இன்ஜி.,- மருத்துவ பாடங்கள் பிரிப்பு

Friday, September 20, 2019




பிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுப்பில் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் செல்வதற்கான முதலாம் பாட பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் இரண்டுக்கும் தனித்தனியே பாடங்களை பிரித்து

தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணைபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாட தொகுப்பு
களில் மாற்றம்செய்யப்படுகிறது.இந்த மாற்றம் வரும் 2020 - 21ம் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாக குழுவின் அறிக்கை மற்றும் அரசு தேர்வுகள் இயக்குனரின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.மொழி பாடம் மற்றும் ஆங்கிலம் தவிர மூன்று முதன்மை பாட தொகுப்பு 500 மதிப்பெண்களுக்கும் நான்கு முதன்மை பாட தொகுப்பு 600மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும். இதில் எதை வேண்டுமானாலும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். தற்போது பிளஸ் ௧ படிப்பவர்கள் அடுத்த கல்வியாண்டில் இப்போது படிக்கும் பாடதொகுப்பில் பிளஸ் ௨வை தொடரலாம் என கூறப்பட்டுள்ளது.புதிய அரசாணையின் படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் இணைந்த முதலாம் பாடப்பிரிவு நீக்கப்பட்டு உள்ளது. அறிவியல் மட்டும் உள்ள இரண்டாம் பாடப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றம் செய்யப்பட்டுள்ள பாட தொகுப்புகள்

பொது அறிவியல் பிரிவு
* கணிதம், இயற்பியல், வேதியியல்
* இயற்பியல், வேதியியல், உயிரியல்
* கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்
* வேதியியல், உயிரியல், மனை அறிவியல்
கலை பிரிவு
n வரலாறு, புவியியல், பொருளியல்
n பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல்
n வணிகவியல், வணிக கணிதம் மற்றும்
புள்ளியியல், கணக்கு பதிவியல்
* வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல்
* முன்னேறிய தமிழ், வரலாறு, பொருளியல்
தொழிற்கல்வி பிரிவு
* கணிதம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
* கணிதம், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
* கணிதம், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
* கணிதம், சிவில் இன்ஜினியரிங்
* கணிதம், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
* கணிதம், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்
* உயிரியல், நர்சிங்
* மனை அறிவியல், டெக்ஸ்டைல் டிரஸ் டிசைனிங்
* மனை அறிவியல், உணவு சேவை மேலாண்மை
* உயிரியல், வேளாண் அறிவியல்
* வணிகவியல், கணக்கு பதிவியல்,
டைப்போக்ராபி மற்றும் கணினி அறிவியல்
n வணிகவியல், கணக்கு பதிவியல், ஆடிட்டிங் - பிராக்டிக்கல்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One