திருக்குறள்
அதிகாரம்:கள்ளாமை
திருக்குறள்:285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
விளக்கம்:
மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.
பழமொழி
Get a thief to catch a thief.
முள்ளை முள்ளால் எடு.
இரண்டொழுக்க பண்புகள்
1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.
2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்
பொன்மொழி
உண்மை இந்த வார்த்தை அனைத்து மனரீதியான தாக்கத்திற்கும் கருவாக அமைகிறது. மனம் நலம் பெற உண்மையே சிறந்த மருந்து என்பதை அனைவரும் உணரவேண்டும் ....
நீதியரசர் ஏ.ஆர் .எல்
பொது அறிவு
செப்டம்பர் 21 -இன்று சர்வதேச அமைதி தினம்
1. அமைதிக்காக இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருது எது ?
பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசு.
2. உலக அளவில் வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு ,இந்தியாவின் பாரத ரத்னா விருது ஆகிய இரண்டையும் பெற்ற ஒரே பெண்மணி யார்?
அன்னை தெரசா
English words & meanings
* Ulcer - A sore that develops on the lining of the small intestine. குடல்புண்
சரியற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறையையு அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனை அல்சர்.
* Understand - perceive the intend meaning
புரிந்து கொள்ளுதல்
ஆரோக்ய வாழ்வு
மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் கிடைக்கும் .
Some important abbreviations for students
* AR - Arunachal Pradesh
* AS - Assam
நீதிக்கதை
வாய்மையே வெல்லும்
ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்திற்கு அடியில் புதையல் இருப்பது போல கனவு வந்தது.
தூக்கத்திலிருந்து கஞ்சன் எழுந்து புதையலை எடுக்க நினைத்தான். பகலில் சென்றால் பிறருக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து இரவில் புதையலை எடுக்க சென்றான். அப்போது, அங்கிருந்த நல்ல பாம்பு ஒன்று அவனைக் கடித்துவிட்டது. விஷம் ஏறியது. விஷக்கடி மந்திரவாதியிடம் ஓடினான் கஞ்சன். அவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு மந்திரம் சொல்லியே நோயைக் குணமாக்குவார்.
பூரான் கடிக்கு - 5 ரூபாய், தேள் கடிக்கு - 10 ரூபாய், பாம்பு கடிக்கு - 25 ரூபாய்
உனக்கு என்ன கடித்தது என்றார் மந்திரவாதி. அந்த நேரத்தில் கஞ்சன் எந்த கடியானாலும் ஒரே மந்திரம் தானே சொல்லப் போகிறார் என்று நினைத்து பாம்பு கடித்தது என்று சொல்லி அதிக காசு கொடுக்க வேண்டும் என்று கஞ்சமாக யோசித்து பூரான் கடித்து விட்டது என்று பொய் கூறினான்.
மந்திரவாதி பூரான்கடி மந்திரத்தை சொல்ல, பயன் இல்லை. மீண்டும் வைத்தியரே எனக்கு தேள் கடித்து விட்டது என்றான். மந்திரவாதி தேள்கடி மந்திரத்தை சொன்னார், இப்போதும் எந்த பயனும் இல்லை.
பயந்து போன கஞ்சன் மெதுவாக, பா, பா பாம்பு கடித்தது என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள் விஷம் தலைக்கு ஏறி இறந்து விட்டான்.
நீதி :
அளவுக்கு மீறின கஞ்சம் உயிரினை எடுக்கும்.
இன்றைய செய்திகள்
21.09.2019
* உலக புகழ் பெற்ற பல்கலையோடு கீழடியில் அடுத்தகட்ட ஆய்வு நடத்த திட்டம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.
* கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்படும் அண்ணா நூற்றறாண்டு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ். தோ்வுக்கு உதவித் தொகையுடன் கூடிய 6 மாத இலவசப் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
* தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
* உலக மல்யுத்த போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
* உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பாங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
Today's Headlines
🌸. Aligned with the world famous University plans to conduct next phase of research in kizhadi announced Minister Mafa Pandiyarajan
🌸Coimbatore: In the Bharathiyar University at Coimbatore campus The Director of the IAS coaching Center said that the trainee people will be given IAS coaching for 6 months with free of cost and with a subsidy in Anna centennial IAS training centre
🌸Heavy rains to be continue for 3 days in Tamil Nadu also the meteorological centre announced that there will be heavy rain in 14 districts today
🌸Bajrang Punia won the bronze medal in 65kg category in World Wrestling Championship
🌸 Indian boxer Amit Pangal has advanced to the final of the World Boxing Tournament.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment