எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பொறியியல், கலை கல்லூரிகளில் 9,500 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை - உயர்கல்வித் துறை தகவல்

Friday, September 13, 2019




அரசு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 9,500 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அக்காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக உயர்கல்வித் துறை யின்கீழ் 34 அரசு பொறியியல் கல்லூரிகள், 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 113 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. கடந்த ஜூலை 19-ம் தேதி தலைமை செயலாளர் கே.சண்முகம் தலைமையில் நடை பெற்ற உயர்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தர மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வெளியான அரசாணை மூலம், அரசு பொறி யியல் மற்றும் கலைக் கல்லூரி களில் 9,500 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை முதன்மை செயலர் மங்கட்ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையில் நடை பெற்ற உயர்கல்வித்துறையின் ஆய்வுக்கூட்டத்தில் 10 கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட் டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் உயர்கல்விக்கு செல்வோரின் எண் ணிக்கையை அடுத்த 4 ஆண்டுகளில் 48.6 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்த வேண் டும். கல்லூரிகளில் உட்கட்ட மைப்புகளை மேம்படுத்தும் பணி களுக்காக ரூ.428.30 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது.இதுதவிர, தேசிய உயர்கல்வி திட்டத்தின் (ரூசா) கீழ், முதல்கட்ட மாக ரூ.349.98 கோடியும், 2-வது கட்டமாக ரூ.615.77 கோடியும் ஒதுக் கப்படும். இதில் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ரூ.116 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து கல்லூரிகளும் கணினி மயமாக்கப்படும்.ஸ்மார்ட் வகுப்பு கள் தொடங்கப்பட்டு பேராசிரியர் களுக்கு நவீன பயிற்சி அளிக்கப் படும். மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதிபடுத்தப்படும்.

5 பல்கலைக்கழகங்களை அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டிய லிலும், 5 ஆண்டுகளில் உலகின் சிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் பட்டியலிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.இன்னும் 4 ஆண்டுகளில் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான திறன்களை மேம் படுத்தி அனைத்து பல்கலைக் கழகங்களையும் ‘ஏ’ கிரேடு அந் தஸ்து பெறநடவடிக்கை எடுக்கப் படும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 6,500-ம், அரசு பொறியியல் கல்லூரிகளில் 1,070-ம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் 1,930-ம் என மொத்தம் 9,500 உதவி பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இக்காலிப்பணியிடங்கள் உட னடியாக கவுரவ விரிவுரையாளர் களைக் கொண்டு நிரப்பப்படும். பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிகளின்படி உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரி யர் தேர்வு வாரியம் மூலம் நேரடி யாக நிரப்பவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தற்போது பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும், கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் கலந்தாய்வு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது’’என்றனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One