கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வருவதே பெரும்பாலும் கஷ்டம் தான். அரசு பள்ளிகளில் விவசாயத்தை நம்பி இருக்க கூடிய குழந்தைகள், ஏழை குழந்தைகள் தான் பெரும்பாலும் படிக்கின்றனர். அந்த மாணவர்கள் பயமின்றி பள்ளி வர வேண்டுமென்றால் 5ம்வகுப்பு, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு இருக்க கூடாது. அரசு தரமான கல்வியை வழங்குகிறது. அந்த தரமான கல்வி வழங்கும் இந்த நேரத்தில் அவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, மாதாந்திர தேர்வு நடத்தப்பட்டு தான் வருகிறது. இது, அந்த மாணவர்களின் திறமையை நிரூபித்து காட்டுகிறது.பொதுத்தேர்வு என்றால் கூட எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் ஒரு நடுக்கம் வரத்தான் செய்யும். அந்த மாதிரி குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதை கருத்தில் கொண்டு 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தக் கூடாது. அரசு பள்ளிகளில் நமது மாணவர்கள் தமிழ்வழி கல்வியில் தான் பெரும்பாலும் படிக்கின்றனர்.
அந்த குழந்தைகளுக்கு கல்வியை பலப்படுத்தவும், தரப்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம், ஆசிரியரின் நோக்கம். அடித்தட்டு மக்களும் நன்றாக படித்து மேலே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நாங்கள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறோம்.இந்த நிலையில் 5ம் வகுப்பு, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதால், அது மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். தரமான மாணவர்களை உருவாக்குவதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி தரலாம். அந்த மாணவர்களை மேம்படுத்தக்கூடிய வகையில் ஆசிரியர்கள் மேம்படுத்தலாம். அதை செய்யாமல் ஒரு தேர்வு என்பது ஒருவனை புத்திசாலியாகவோ, முட்டாளாக்கவோ ஆக்கி விடாது. தேர்வு நேரத்தில் ஒரு மாணவனின் உடல் நிலை சரியில்லாமல் போகலாம். குடும்ப பிரச்னை காரணமாக கூட ஒரு மாணவன் படிக்காமல் போகலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில் குறைந்த மதிப்பெண் பெற்ற அந்த மாணவன் பெறுவதை மதிப்பீடு செய்வது சரியான செயலாக இருக்காது என்று நான் பார்க்கிறேன். வயல்களில் வேலை செய்யும் குழந்தைகள், ஆட்டோ ஓட்டும் குழந்தைகள்,கூலித் தொழிலாளர் குழந்தைகள் படிக்க வேண்டும். இந்த மாதிரி பொதுத்தேர்வு வரும் போது அவர்களுக்கு கல்வி கேள்விக்குறியாகிவிடும்.இதன் நோக்கம் எப்படியாக இருந்தாலும் சரி. கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும். இதனால், இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சாதாரண தேர்வு என்றால் மாணவர்கள் பயப்பட மாட்டார்கள். பொதுத்தேர்வு என்றால் ஒரு பயம் இருக்கும். நமது கல்வி அமைச்சர் பின்லாந்து சென்று வந்தார். அங்கு, எல்கேஜி, யுகேஜி கிடையாது. அங்கு ஒரு மாணவன் புரிந்து கொள்கிற வயதில் தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர். எப்போது ஒரு மாணவன் புரிந்து படிக்கிறானோ அப்போது தான் அவன் சிறந்தவனாக உருவாகிறான். மனப்பாடம் வைத்து ஒரு பரீட்சைக்கு மாணவன் படிக்க கூடாது. அந்த மாணவன் பார்த்தது, உணர்ந்ததில் இருந்து கேள்வி கேட்க வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கு ஒவ்வொரு திறமை உள்ளது. அந்த மாணவனின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும். அதை விடுத்து அந்த மாணவனுக்கு ெபாதுத்தேர்வு என்ற பெயரில் பயமுறுத்தி மன உளைச்சலை ஏற்படுத்த கூடாது. இதை அரசு நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டால் மாணவ சந்ததிகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். இடைநிற்றல் என்ற நிலை இருக்கவே இருக்காது.நமது கல்வி அமைச்சர் பின்லாந்து சென்று வந்தார். அங்கு, எல்கேஜி, யுகேஜி கிடையாது. அங்கு ஒரு மாணவன் புரிந்து கொள்கிற வயதில் தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
No comments:
Post a Comment