எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், உடனடி சக்தி தரும் ஊட்ட உணவு
ஆகும். தொடர்ந்து பேரீத்தம் பழம்
உண்பவர்களுக்கு வயிறு, குடல் நோய்கள்
குணமடையும். வயிற்றில் உள்ள நுண் கிருமிகள்
வெளியேறும். அதிக நார்ச்சத்து கொண்டதால்
மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்கிடும்.
பேரீத்தம் பழங்கள் மிக அதிக சர்க்கரை
கொண்டவை எனவே, நீரிழிவு உடையவர்கள்
பேரீத்தம் பழம் உண்பதை அவசியம் தவிர்த்திட
வேண்டும்.
அதிக வேலைப்பளு மன உளைச்சல், நீண்ட
பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்ப முள்ள
பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத்
தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள்
பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து
பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால்
நரம்புத் தளர்ச்சி நீங்கி ஞாபக சக்தி கூடும்.
கைகால் தளர்ச்சி குணமாகும்
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம்
சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு
காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால்
இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை
நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை
ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.
பேரீத்தம் பழம் எலும்புகளைப் பலப்படுத்தும்.
இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீத்தம் பழம்
உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான
இன்னல்களைக் குறைக்கும்.
பேரீத்தம் பழத்தில் சிறந்த நோய் எதிர்ப்புப்
பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும்
பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை
உடற்செல்களைக் காப்பதோடு, தீங்கு
விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை
விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல்,
தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய
உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு
எதிராக செயல்படக் கூடியது.
வைட்டமின் ஏ குறைவினால்தான் கண் பார்வை
மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம்
பழமே சிறந்த மருந்தாகும்.
மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்ட வர்கள்,
பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து
ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத்
தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.
இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
(சித்தா யூனானி மருத்துவக் குறிப்புக்கள்)
No comments:
Post a Comment