தமிழக அரசின் கல்வி, 'டிவி' சேனலை தரம் உயர்த்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறையில், பல்வேறு புதிய திட்டங்களை, அமைச்சர்செங்கோட்டையன் அமல்படுத்தி வருகிறார். புதிய பாட திட்டம், தேர்வு முறை மாற்றம், நிர்வாக சீரமைப்பு என, பல மாற்றங்கள் அறிமுகமாகி உள்ளன. அதேபோல, பள்ளிகள் ஒருங்கிணைப்பு, கற்பித்தல் முறையில் மாற்றம், ஆசிரியர்களுக்கான நியமன விதிகளில் மாற்றம் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.இதன் ஒரு கட்டமாக, பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி, 'டிவி' துவங்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., இந்த, 'டிவி' ஒளிபரப்பை துவக்கி வைத்தார். இந்த சேனலுக்கான ஒளிபரப்பு இணைப்பு, அரசு கேபிளில், 200ம் எண்ணில் வழங்கப் பட்டுள்ளது.தற்போது, இலவசமாக உள்ள இந்த சேனலின் தரத்தை உயர்த்தும் வகையில், கட்டண சேனலாக மாற்ற, தமிழகபள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் படிப்புக்கு பயனுள்ள காட்சிகள் ஒளிபரப்பாவதால், அரசு கேபிளில், குறைந்த கட்டணம் உள்ள சேனல்களின் பட்டியலில், கல்வி, 'டிவி'யும் இடம் பெற உள்ளது.
அரசு கேபிள் வழியாக, பொதுமக்கள் செலுத்தும் மிகக் குறைந்த கட்டணம், பள்ளி கல்வித்துறையின், கல்வி சேனலுக்கான செலவுக்கு பயன்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment