எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது?

Monday, September 9, 2019




பள்ளிக்கல்வி துறை மூலம் நடைபெற இருந்த ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. அதிலும் குளறுபடிகள் நடந்ததால் இடைநிலை ஆசிரியர் பணிநியமன ஆணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைக்கப்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு காலாண்டு விடுமுறையில் நடத்தப்படும் என அறிவித்தது. நீதிமன்ற உத்தரவால் மூன்றாண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு ஓராண்டு காலம் பணிபுரிந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அது குறித்த தகவல் அரசால் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது செப் 24 முதல் காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. ஆனால் பொது கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளிவரவில்லை. இந்த வாரத்திற்குள் அறிவிப்பு வரலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

1 comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One