எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்களுக்கு வடை, பாயசத்தோடு அறுசுவை விருந்தளித்த ஆசிரியர்கள்

Saturday, September 21, 2019


மாணவர்களால்தான் நாங்க ஆசிரியர்களாக இருக்கு முடியுது. அதற்காக, எங்க பள்ளி மாணவர்களுக்கு எங்களால செய்யமுடிந்த சின்னப் பரிசு' என்று அரசுப் பள்ளி மாணவர்கள் 180 பேருக்குத் தலைவாழையில் வடை, பாயசத்துடன்கூடிய விருந்தளித்து, அந்தப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை நெகிழவைத்திருக்கிறார்கள்.

 மாணவர்களுக்கு விருந்தளிக்கும் ஆசிரியர்கள்
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்திலிருக்கும் பொய்யாமணியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில், 180 மாணவ மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் முத்துலெட்சுமி. மாவட்டத்தின் கடைக்கோடி எல்லையாக இருக்கும் இந்தப் பள்ளியை, ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து தனியார் பள்ளிக்கு இணையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். 20 லட்சம் வரை ஸ்பான்ஸர்ஸ் பிடித்து, வைஃபை வசதி, ஏ.சி கிளாஸ் ரூம்கள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், கணினி வழி பாடம் நடத்துதல் என்று பள்ளியை நவீனமாக்கி வைத்திருக்கிறார்கள். அதோடு, பள்ளியில் இயற்கை விவசாயம் மூலம், காய்கறிகளை உற்பத்திசெய்து, அதைக்கொண்டு உணவு தயாரித்து, மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கி வருகிறார்கள். இந்தப் பள்ளி, ஐஎஸ்ஓ தரச் சான்றிதழைப் பெற்றிருக்கிறது.

 மாணவர்களுக்கு விருந்து
இந்நிலையில், 'இந்த மாணவர்களால்தான் நாங்க ஆசிரியராக இருக்கிறோம்; அவங்க இல்லைனா, நாங்க இல்லை. அவங்களுக்கு எங்களோட சின்னப் பரிசு' என்றபடி, எட்டாயிரம் ரூபாய் செலவு செய்து, அறுசுவை உணவைத் தயார்செய்து, தலைவாழை விருந்து படைத்து அசத்தியிருக்கிறார்கள் ஆசிரியர்கள். இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியைகளாகப் பணிபுரியும் சாந்தி, சித்ரா என்ற இரண்டு ஆசிரியைகள்தான் இந்த ஐடியாவைச் சொல்லி, மொத்த ஆசிரியர்களையும் சேர்த்துக்கொண்டு, இப்படி மாணவர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

இதுபற்றி, ஆசிரியைகள் சாந்தி மற்றும் சித்ராவிடம் பேசினோம். "நாங்க இன்னைக்கு ஆசிரியர்களாக இருக்கோம்னா, அதுக்கு காரணம், எங்களுக்குக் கிடைத்த இந்த மாணவர்கள்தான். நாங்க எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் ஒத்துழைத்து, இந்தப் பள்ளியை சிறந்த பள்ளியா மாற்ற காரணமாக இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு ஏதாச்சும் பண்ணணும்னு நாங்க ரெண்டுபேரும் நினைச்சோம். கடந்த 5-ம் தேதி கொண்டாடப்பட்ட ஆசிரியர் தினத்தன்று, பள்ளியில் உள்ள 180 மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் செலவுல மதிய விருந்து சமைச்சுப் போடலாம்'னு எங்க பள்ளித் தலைமை ஆசிரியர்கிட்ட சொன்னோம். அவங்களும் சந்தோஷமா சம்மதிச்சாங்க. ஆனா, அப்போதைக்கு எங்களால செய்யமுடியலை.

ஆசிரியர்கள் எல்லாரும் பணம் போட்டு, எட்டாயிரம் ரூபாய் வரை செலவுபண்ணி, மாணவர்களுக்கு வடைபாயசத்தோடுகூடிய அறுசுவை விருந்து வைத்திருக்கிறோம். சமையலை தலைமை ஆசிரியை முத்துலெட்சுமி, ஆசிரியைகள் காந்திமதி, உமாமகேஸ்வரி, கவிதா, தமிழ் பூங்குயில்மொழி, ஆசிரியர் பூபதினஆகியோர் சேர்ந்து செய்து, மாணவர்களுக்கு எங்க கையாலேயே பரிமாறினோம். மாணவர்கள் அத்தனை பேரும் நெகிழ்ந்துபோயினர். 'நன்றி' என்று எல்லோரும் ஒண்ணா சேர்ந்து சொல்லி, எங்களையும் மகிழ்ச்சியடையவச்சுட்டாங்க" என்றார்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One