''தமிழகத்தில், 1,000 பள்ளிகளில், டிசம்பர் முதல் வாரத்தில், 'அடல் டிங்கர் லேப்' துவங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
'இஸ்ரோ' மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், இஸ்ரோ விண்வெளி கண்காட்சி, ஈரோடு மாவட்டம், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் கண்காட்சியை, அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் துவக்கி வைத்தனர்.
விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:பள்ளி மாணவர்களை, சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க, இதுபோன்று, கண்காட்சி நடத்தப்படுகிறது. முதல்வர், இ.பி.எஸ்., ஒப்புதலோடு, தமிழகத்தில், 1,000 பள்ளிகளில், 'அடல் டிங்கர் லேப்' என்ற விஞ்ஞான ஆய்வகம், டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கப்படும்.இதற்காக, தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும், 20 லட்சம் ரூபாய் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவன் விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்யவும், அரசு, நிதி வழங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment