ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரதத்தில் புயலாக மாறும் இதற்கு மகா ( MAHA ) என பெயரிடப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்திற்கு தென்மேற்கே 220 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment