திருக்குறள்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
விளக்கம்:
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
பழமொழி
Drawn wells have sweetest water
இறைக்கிற கிணறு ஊறும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி மறப்பது நன்று அன்று.
2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.
பொன்மொழி
துன்பத்திலிருந்து விடுபட நினைத்தால் முதலில் தாம் வசிக்கும் சூழலை தூய்மையாக வைக்க வேண்டும் .மனம் என்றாலும் வாழிடம் என்றாலும் இவை நம் துன்பத்தை போக்க வல்லது......
பொது அறிவு
1. செல் அமைப்பு இல்லாத ஒரே உயிரினம் எது?
வைரஸ்.
2. பார்கின்சன் நோய் தாக்கும் உடல் உறுப்பு எது?
நரம்பு மண்டலம்
English words & meanings
* Radiology - study of X-ray which is used to diagnoise and treat disease. நோய்கள் கண்டறிந்து மருத்துவம் செய்ய உதவும் X-ray குறித்த படிப்பு.
* Radio - an electric equipment sends and receives messages as signals.
வானொலிப் பெட்டி.
ஆரோக்ய வாழ்வு
கற்றாழையில் ஆன்டிசெப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் காயங்கள், புண்கள் மற்றும் பூச்சிக்கடிகள் போன்றவற்றிக்கு இதனைப் பயன்படுத்தலாம்.
Some important abbreviations for students
Jr. - Junior.
Sr. - Senior
நீதிக்கதை
அம்மா சொல் கேள்!
ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது.
ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி.
சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது.
உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது.
நீதி :
அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.
இன்றைய செய்திகள்
*ஆழ்துளை கிணற்றில் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்படுகிறது
*பார்த்தாலே பரவசப்படுத்தும் பனிப்பாறைக்குள் கொடிய வைரஸ், பாக்டீரியாக்கள் நூற்றாண்டுகளாக மறைந்து உள்ளன. புவிவெப்பமயமாதல் காரணமாக பனி உருகும்போது, இந்த வைரஸ் நோய் கிருமிகள் மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
* தில்லி அரசுப் பேருந்துகளில் 13,000 பாதுகாவலா்கள்: முதல்வர் கேஜரிவால் அறிவிப்பு.
* உலக கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி: அனில் கும்ப்ளே பெருமிதம்.
*தீபாவளி பண்டிகை காரணமாக காற்று மாசு அதிகரிப்பு :தில்லி டி20 ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல்.
Today's Headlines
🌸 Rescue mission
on Surjith was intensified
🌸 Killing viruses and bacteria which are hidden in the glacier for centuries. Scientists warn that The same glaciers which gives us pleasure may give us pain and attack the humans if the glaciers start to melt due to global warming
🌸13,000 security guards are appointed in Delhi state buses: announced Chief Minister Kejriwal
🌸Indian team dominating the world cricket proudly says Anil Kumble
🌸 Increase of air pollution in Delhi on the account of Diwali festival - which arise a big question will there be a T20 game as planned.
Prepared by
Covai women ICT_போதிமரம.
No comments:
Post a Comment