கடந்த நான்கு நாட்களாக முன் வைக்கப்பட்ட அத்தனை யோசனைகளை யும் முயற்சி செய்தும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரை காப்பாற்ற முடியவில்லை
அரசு நிர்வாகமும் அதன் அனைத்து துறை பணியாளர்களும் தன்னார்வலர்கள் பகலும் மேற்கொண்ட முயற்சி விழலுக்கு இறைத்த நீராய் வீணாய் போய் விட்டது
சுஜித் மரணம் நீங்கா வடுவையும் நிறைய பாடத்தையும் நமக்கு விட்டு சென்று உள்ளது
வரு முன் காப்போம் என்ற உயரிய சிந்தனையின் பாதையில் விலகி நாம் வெகு தூரம் வந்து விட்டதை இனியாவது நாம் உணர்ந்து அதை சமுதாயம் உணரும் வகையில் நமது பங்களிப்பை தர பொறுப்பு ஏற்று பணி ஆற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்
சமுதாயத்தில் நெருங்கிய தொடர்பில் உள்ள ஆசிரியர் சமூகம் இதை கையில் எடுப்பது மிக அதிக வெற்றியை தரும் என்பது திண்ணம்.
ஆகவே நாம் ஒவ்வொரு ஆசிரியரும் தாங்கள் பள்ளி குழந்தைகள் மூலம் தொடர் முயற்சி மேற்கொண்டு அவரவர் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் பயன்பாடு இல்லாத மூடப்படாத கிணறுகள் குறித்து தகவல் சேகரித்து உள்ளூர் நிர்வாகம் மூலமோ அல்லது சொந்த முயற்சி மூலமோ குழிகள் மூடப்பட கவனம் செலுத்த அன்புடன் வேண்டுகிறேன்.
இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்
No comments:
Post a Comment