பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், சுற்றுலா செல்வதை தவிர்க்கும்படி, பள்ளிகளுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில், ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை, வடகிழக்கு பருவ மழையும் பெய்வது வழக்கம். இந்தாண்டு தீவிரமாக பெய்த தென்மேற்கு பருவ மழை, அக்., 15ல் முடிவுக்கு வந்தது.மறுநாளான, அக்., 16ல், வடகிழக்கு பருவமழை துவங்கியது. தமிழகம் முழுவதும், பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, பருவ மழை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருவதால், மாணவர்கள் சுற்றுலா அழைத்து செல்வதை தவிர்க்குமாறு, பள்ளிகளுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கல்வி தொடர்பாக, தொழிற்சாலைகளை பார்வையிடுதல் போன்றவற்றுக்கு மட்டும், மாணவர்களை அழைத்து செல்லலாம் என, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment