இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிறு அன்று வருவதால் தீபாவளிக்கு முந்தைய நாளான சனியும், பிந்தைய நாளான திங்களும் விடுமுறை தினங்களாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அரசு விளக்கமளித்துள்ளது
தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமையும் பிந்தைய நாளான திங்கட்கிழமையும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் இந்த இரண்டு நாட்களிலும் விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் தீபாவளிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நாள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து தீபாவளிக்கு முந்தைய நாளும் , பிந்தைய நாளும், வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வேலை பார்ப்பவர்கள், அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
No comments:
Post a Comment