அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மழைநீ்ர் தேங்காத வகையில் சுத்தகமாக பராமரிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அனைத்து பள்ளி வளாகங்களிலும் ஒவ்வொரு சனிக்கிழமையில் குப்பைகளை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவைகள் பள்ளி மாடிகளில் இல்லாதவாறு பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தருமபுரி, திருவள்ளூர், நெல்லை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும், 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பிரார்த்தனை நேரத்தில் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியாவை தடுப்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழமையான கட்டிடங்கள் இருந்தால் அகற்றவும் அதன் பட்டியலை அளிக்க ஆட்சியருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment