எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட்

Wednesday, November 27, 2019




தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதையடுத்து, அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை என அவர் தெரிவித்திருந்தார். சென்னை கோட்டூர்புரத்தில் ஆங்கில வழிகாட்டி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மாணவர்கள் முழுநேரமும் படித்து அதிக மதிப்பெண்களை பெற பெற்றோர்கள் விரும்புவதாக கூறினார். மேலும் பள்ளிகளை சுத்தப்படுத்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தினார்.

அதேபோல தமிழ்நாட்டில் 5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித்திற மேம்பாட்டை அறிய பொதுத்தேர்வு நிச்சயம் தேவை என்றும் அவர் கூறினார். 12-ம் வகுப்பு முடித்த 20 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து ஆடிட்டர் படிப்பிற்காக 500 ஆடிட்டர்களை கொண்டு இலவச பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். பிளஸ் 2 மாணவர்களுக்கு தொழில்கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது மாநில அரசின் கொள்கை என கூறிய அவர், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே, வழக்கு முடிந்த பிறகு தான் அது குறித்து பேச முடியும் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் புதிய அறிவிப்பாக அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் தினசரி 15 நிமிடம் உடற்பயிற்சி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One