திருக்குறள்
அதிகாரம்:கொல்லாமை
திருக்குறள்:327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
விளக்கம்:
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.
பழமொழி
Little wealth, little care.
மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. கடலையும் கடல் சார்ந்த பொருட்களையும் பாதுகாப்பேன்.
2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.
பொன்மொழி
நம்முடைய செயலில் ,தன்னலம் இன்றி பொதுநலம் இருக்குமாயின் ,ஒரு சமூக வழிகாட்டியாக உயர்கிறோம் .
___மகாத்மா காந்தி
பொது அறிவு
1. 'திரிவேணி சங்கமம் 'என்று அழைக்கப்படும் நகரம் எது?
அலகாபாத்
(கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்).
2. அலகாபாத் நகரில் பிறந்து இந்திய பிரதமரான மூன்று தலைவர்கள்
யாவர்?
ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி , வி.பி. சிங் .
English words & meanings
Nosology – study of diseases.நோய்ப் பகுப்பியல். நோய்களைக் குறித்த படிப்பு .
Nascent - just coming into existence. பிறக்கும் நிலையிலுள்ள, முழு வளர்ச்சி எய்தாத
ஆரோக்ய வாழ்வு
சுரைக்காயில் வைட்டமின் பி ,வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இது சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்களுக்கு சிறந்தது.
Some important abbreviations for students
POW - Prisoner Of War
RNC - Republican National Committe
நீதிக்கதை
ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்
ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம். வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.
அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும் சொல்லி பெருமை பேசிக் கொள்வான்.
மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை. அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக் கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தையுடன் இருந்தான்.
அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆணவத்துடன் பேசினான்.
அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார். அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மௌனம் காத்தார்.
இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், கொஞ்சம் உணவு கிடைக்காதா? என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.
இதையடுத்து அந்த விவசாயிடம், ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும் என்றான்.
விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான் என்றார். தொடர்ந்து அவர், இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம் என்றார்.
விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான். தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.
திங்கள்
தமிழ்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்
கிரயம் - விலை
குதூகலம் - அக்களிப்பு
கோஷ்டி - குழாம்
சக்தி - ஆற்றல்
சகஜம் - வழக்கம்
இன்றைய செய்திகள்
25.11.19
* தேசிய மருத்துவ பரிசோதனை நாளை (National health Check up) முன்னிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துசெல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
* "சந்திராயன்-2-ன் அறிவியல் குறிக்கோள்கள்
முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன"- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு !
*ரூபிக் க்யூப் புதிரினை சென்னையைச் சார்ந்த 6 வயது பள்ளி மாணவி சாரா 2 நிமிடம் 7 நொடிகளில் கண்ணை கட்டிக் கொண்டு செய்து சாதனை படைத்தார்.
* தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. CSS எனப்படும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ், இந்த மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.
* இந்தியா வங்காளதேசத்திற்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தனது 27 வது டெஸ்ட் சதத்தை அடித்தார் விராட் கோலி.
Today's Headlines
🌸 The Times of India is trying to raise awareness about health among people on behalf of National Health Check-up Day.
🌸Central minister Jitendra Singh praised that "scientific objectives of Chandrayan-2 have been fully accomplished" .
🌸6-year-old student Sara from Chennai set a record by bind her eyes and solved Rubik's cube puzzle in 2 minutes and 7 seconds.
🌸 Central Government has approved setting up of new Medical Colleges in 6 States including Tamil Nadu. These medical colleges are to be set up under the Central Government Assistance Scheme (CSS).
🌸 virat Kohli score his 27 the century in the first test match against Bangladesh.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment