புதியதலைமுறை கல்வி இதழானது, கடந்த சில வாரங்களாக பள்ளி மாணவர்களுக்கு கடிதப்போட்டியை தமிழக அளவில் நடத்தி வருவதை அறிந்திருப்பீர்கள்.
பள்ளி மாணவர்களுக்குத்தானா? எங்களுக்கு இல்லையா என்று கேட்டால்... பெரியவர்களுக்கு இருக்கிறது என்று சொல்கிறது தமிழ்நாடு தபால்துறை...
கடிதம் எழுதும் வழக்கமே மறந்து போயிருக்கும். உங்களை புதுப்பித்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பு.
யாருக்கு கடிதம் எழுதணும்..? மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதணும். என்னான்னு எழுதுணும்..? அது உங்கள் விருப்பம்.
இரண்டு பிரிவுகளில் இப்போட்டி நடைபெறுகிறது.
18 வயதுக்கு கீழே உள்ள பிரிவினர்களுக்கு தனியாகவும், 18 வயதுக்கு மேலே இருப்பவர்களுக்கு தனியாகவும் நடத்துகிறார்கள். பள்ளி மாணவர்களும், பாமரர்களும் கலந்து கொள்ளலாம்.
முக்கியமான விதிமுறை என்ன தெரியுமா? இன்லெண்ட் லெட்டரிலோ, கடித உறையிலோ கடிதம் எழுத வேண்டும். சொந்த கையெழுத்தில் இருக்க வேண்டும். இன்லண்ட் லெட்டர் எனில் 500 வார்த்தைக்குள்ளும் (அவ்ளோ வார்த்தைகள் எழுதமுடியுமா?), கடித உறை எனில் 1000 வார்த்தைக்குள்ளும் இருக்க வேண்டும்.
தபால்துறைக்கு கடிதம் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: நவம்பர் 30.
25 ஆயிரம் ரூபாய் அளவுக்கு பரிசெல்லாம் இருக்குது. எடுங்க பேனாவை... எழுதுங்க உங்க தாத்தாவுக்கு கடிதத்தை...
மேலதிக விவரங்களுக்கு இத்துடன் இணைத்திருக்கும் படத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி: தமிழ் இந்து
பள்ளி ஆசிரியர்கள் தங்களது மாணவர்களை இக்கடிதப்போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்தலாமே...
No comments:
Post a Comment