நாளை மதவிடுப்பு ( வரையறுக்கப்பட்ட விடுப்பு உண்டா? இல்லையா? என்று குழப்பம் தொடர்ந்த நிலையில் தற்போது, 2019 ஆம் ஆண்டுக்கான கியார்வீன் முகைதீன் மத விடுப்பு நாள் எது என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாளை (27.11.2019) வரையறுக்கப்பட்ட விடுப்பு இல்லை. 2016 அரசாணையின் படி நாளை விடுப்பு எடுக்கலாம் என கூறப்பட்டது. அதனால் நமது இணையத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால், சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் அவர்கள் வெளியிட்டுள்ள, 2019 ஆம் ஆண்டுக்கான் வரையறுக்கப் பட்ட விடுப்பு (RH) பட்டியலின் படி, நாளை (27.11.2019) RH கிடையாது.
மேலும், இவ்வாண்டு கியார்வீன் முஹையத்தீன் ஆண்டவர் 8.12.2019 ஞாயிறு அன்று வருகிறது.
ஆகையால் நாளை 27.11.2019 புதன் அன்று எவ்வித வரையறுக்கப்பட்ட விடுப்பு ( restricted holiday) எதுவும் இல்லை.
கியாரா என்றால் 11 . அதுதான் அதாவது நாள் அதாவது முகைதீன் ஆண்டவருக்கு 11 வது நாள் விழா எடுக்கும் நிகழ்ச்சி என்று பொருள்
கியார்வீன் முகைதீன் மத விடுப்பு 08.12.2019 ஞாயிற்றுக் கிழமை என்பதால் நாளை (27.11.2019) வரையறுக்கப் பட்ட விடுப்பு எடுக்க அனுமதி இல்லை.
தற்போது ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வருகைப் பதிவு மேற்கொள்ளப் படுவதால், உரிய விதிகளைப் பின்பற்றி RH எடுப்பது நல்லது.
No comments:
Post a Comment