திருக்குறள்
அதிகாரம்:கொல்லாமை
திருக்குறள்:330
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
விளக்கம்:
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.
பழமொழி
As the old cock crows, so crows the young.
மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக் கொடுக்கவா வேண்டும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. கடலையும் கடல் சார்ந்த பொருட்களையும் பாதுகாப்பேன்.
2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.
பொன்மொழி
எழுத்தாற்றல் என்பது ஒரு வரம் . சமூகத்தின் கண்ணாடியாக எழுத்துக்கள் விளங்குகின்றன.
---- ராஜேஷ்குமார்
பொது அறிவு
1.இரண்டு தேசியக் கொடிகளை கொண்ட நாடு எது?
ஆப்கானிஸ்தான்.
2.ரோஜாக்களில் இருந்து பன்னீரை தயாரித்து அதன் மூலம் பிரபலமானவர் யார்?
நூர்ஜஹான்.(அரசர் ஜஹாங்கிரின் மனைவி)
English words & meanings
Quinology – study of quinine. Quinology – study of quinine. கொயினா மருந்து குறித்த ஆராய்ச்சி மற்றும் அறிவியல்.
Quinine - a medication used to treat malaria. கொயினா, சிங்கோனாபட்டையிலுள்ள மருந்து பொருள். மலேரியா காய்ச்சலுக்கு உகந்த மருந்து.
ஆரோக்ய வாழ்வு
வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
Some important abbreviations for students
mts. - mountains
Mus. - Museum
நீதிக்கதை
கடவுள் கொடுத்த வரம்
அருண் ஆறாம் வகுப்பு மாணவன். அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர். பிரகாஷிற்கு அவன் தந்தை கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார். எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.
ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான். தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான். கடவுள் அவன் முன்னால் தோன்றி அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன். ஆனால் யோசித்துக் கேள் என்றார்.
அருண் உடனே இறைவா. நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும் என்றான். அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார். உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது. அப்பா, அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.
அருணுக்கு பசி எடுக்க. அம்மா உணவு எடுத்து வந்தார். அருண் உணவில் கை வைக்க அது பணமானது. தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அதுவும் பணமானது. பசியால் வாடிய அருண். அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான். மீண்டும் இறைவனை வேண்டினான்.
இறைவன் தோன்ற, அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி தன்னை மன்னிக்கும்படியும் தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான். உடன் இறைவன் அருணைப்பார்த்து அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும் நோயற்ற வாழ்வும் தான் செல்வம். அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது என்று கூறி அவனுக்கு அவ்விரண்டையும் அருளினார்.
இன்றைய செய்திகள்
28.11.19
* இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது.
* 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நேற்று பிற்பகல் நிரம்பியது. அணை பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1396 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
* இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாண அரசு ஸ்மார்ட் போன்களுக்கு குழந்தைகள் அடிமையாவதை தவிர்க்கும் புதிய முயற்சியாக பள்ளிக்குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கியுள்ளது. அதனை வளர்ப்பதில் குழந்தைகள் கவனம் செலுத்தும் போது
தொழில்நுட்ப பாதிப்பில் இருந்து திசைதிருப்ப முடியும்.
* ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
* ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்திற்கும் விராட் கோலிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், முதல் 10 இடத்திற்குள் நான்கு இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
Today's Headlines
🌸The PSLV-C-47 rocket successfully launched on Wednesday, carrying India's Cartosat satellite and 13 other smaller satellites of US.
🌸The Papanasam Dam, 143 feet high, was filled yesterday afternoon. 1396 cubic feet of water per second is opened for the safety of the dam.
🌸 The State Government of West Java, Indonesia has issued chicks to schoolchildren in an effort to prevent children from becoming addicted to smart phones. When they start to concentrate on the growth of the chicks the children
Can be distracted from technical effects .
🌸 The Indian team has won 3 bronze medals at the Asian Archery Championships.
🌸Four Indians in the top 10, with Smith and Virat Kohli in the ICC Test rankings.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment