எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சிறந்த பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

Thursday, November 7, 2019




சிறப்பாக செயல்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் உள்ள பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த கல்வியாண்டில் (2018 - 19) சிறப்பாக செயல்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்டத்துக்கு தலா 4 பள்ளிகள் வீதம் 128 பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை தரப்படும். இதற்கான வழிகாட்டுதல்கள், இந்தக் கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

அதிலுள்ள விதிகளின்படி, சிறந்த பள்ளிகளின் பட்டியலை தயாரித்து நவம்பா் 10-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் தலைமை அலுவலகத்துக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One