எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நாளை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடக்கம் ( ஆசிரியர் ஒரு காலிப் பணியிடத்தை தேர்வு செய்தபின், ஏற்கெனவே அவர் பணிபுரிந்த இடம் காலியாக காண்பிக்கப்பட்டு உடனடியாக நிரப்பப்படும். )

Sunday, November 10, 2019




அனைத்து வகை ஆசிரியர்களுக் கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (நவ.11) தொடங்குகிறது.

அனைத்து வகை ஆசிரியர் களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு எமிஸ் இணையதளம் வழியாக நாளை (நவ.11) தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு:

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முது நிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரி யர்களுக்கான பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு நவ.11 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும். தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதி தையல் ஆசிரியர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு நடைபெறும்.

இதேபோல், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் கள் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கான மாறுதல் கலந்தாய்வு நவம்பர் 18 முதல்21-ம் தேதி வரை நடைபெறும்.

கால அவகாசம் குறைவாக இருப்பதால் விரைவாகவும், புகார்கள் வராத வண்ணம் கலந்தாய்வை முதன்மை கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும். முதலில் மாவட்டத் துக்குள்ளும், அதன்பின் மாவட் டம் விட்டு மாவட்டமும் கலந் தாய்வு நடத்தப்படும்.

மேலும், கலந்தாய்வில் ஆசிரியர் ஒரு காலிப் பணியிடத்தை தேர்வு செய்தபின், ஏற்கெனவே அவர் பணிபுரிந்த இடம் காலியாக காண்பிக்கப்பட்டு நிரப் பப்படும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One