இன்று பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி இடமலைப்பட்டி புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் யுகா அமைப்பு, பெண்கள் முன்னேற்றக் குழு , ரோட்டரி இணைந்து நடத்திய தற்காப்பு கலைத்திறன் வெளிப்பாடு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மணிகண்டம் வட்டார உதவி கல்வி அலுவலர் திரு.மருதநாயகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி பொறியாளர் திருமதி அமுதவல்லி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தம் சிறப்புரையில் வளர்ந்துவரும் நவீன சூழலுக்கு ஏற்ப பெண்கள் அனைவரும் தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள வேண்டும். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மேம்பாடு யாவற்றிலும் பெண்கள் தங்கள் திறனை வளர்த்து முன்னேற வேண்டும். பெண்களுக்கு எதிராக நடைபெறும் சமூக குற்றங்கள், வன்முறைகள் கண்டு அஞ்சாமல் அறிவுப் பூர்வமாக துணிவுடன் செயல்பட்டு எதிர்கொள்ள வேண்டும் என்றார். பெண்களை மதித்து சமத்துவமாக பாலின பேதமின்றி நடத்திட வேண்டும். தாய்மார்கள் ஆண் பிள்ளைகளை வளர்க்கும் போது பெண்களை மதிக்கவும், சகோதரத்துவத்துடன் நடத்தவும், வளர்ச்சிக்கு துணை நிற்கவும் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்றார். தற்காப்பு கலையை சிறப்பாக நிகழ்த்திய , பயிற்றுவித்த ஆசிரியர்களை மனதார வாழ்த்துகிறேன். அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வர சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பெரிய விருதுகள் என்றார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தற்காப்பு கலைகளான சிலம்பம், கராத்தே, சுருள்வாள். வாள் வீச்சு உள்ளிட்ட கலைகள் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து மகப்பேறு மருத்துவர் திருமதி.ஷகிலா ஜமீர் வாழ்த்துரை வழங்கினார். யுகா அமைப்பின் இயக்குநர்திருமதி அல்லிராணி நோக்கவுரையாற்றினார்.முன்னதாக திரு.மருதநாயகம் வரவேற்புரையாற்றினார். .... கலைக்காவிரி கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் தொகுத்து வழங்கினார். தற்காப்பு கலை நிகழ்த்திய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்வில் உறுதி மொழி மாணவர்கள் ஏற்றனர்.உறுதி மொழியின் அடையாளமாக உள்ளங்கை ரேகையை வண்ணத்தில் தடவி முத்திரை இட்டனர். கராத்தே பயிற்சியாளர் புஷ்பா, சிலம்பம் பயிற்சியாளர் பிரவீன் உள்ளிட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.நிகழ்வை யுகா அமைப்பின் திருமதி.அல்லிராணி ஒருங்கிணைத்தார்.
No comments:
Post a Comment