எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.12.19

Saturday, December 7, 2019




திருக்குறள்


அதிகாரம்:நிலையாமை

திருக்குறள்:338

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

விளக்கம்:

உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.

பழமொழி

Live with in your means

வரவுக் கேற்ற செலவு செய்

இரண்டொழுக்க பண்புகள்

 1. காலம் பொன் போன்றது. எனவே என் நேரத்தை வீணாக்காமல் படிப்பேன்.

2. கடமை கண் போன்றது எனவேஎனது படிப்பிலும் என் கடமைகளை முடிப்பதிலும் கவனம் செலுத்துவேன்.

பொன்மொழி

நிதானம் என்பது நம் உணர்வுடன் தொடர்புடைய செயல். தவறும் போது தன்மானம் தொடர்புடையதாகிறது.

------- பரமஹம்சர்

பொது அறிவு

1. அதிக அளவில் காப்பி பீன்ஸ் உற்பத்தி செய்யும் இடம் எது?

பிரேசில்

2. அதிக அளவில் விமான நிலையங்கள் உள்ள நாடு எது?

அமெரிக்கா 13,513 விமான நிலையங்கள்

English words & meanings

1. Yearlong
ஆண்டு முழுவதும் நீடித்திருக்கிற

2. Yester-Year
சென்ற ஆண்டு

ஆரோக்ய வாழ்வு

 ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிடுவது இரத்தக்கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

Some important  abbreviations for students

TBA – to be announced

TBC - to be confirmed

நீதிக்கதை

வேலை ஒன்று சம்பளம் இரண்டு

சத்ரபதி சிவாஜியின் அரண்மனையில் வேலை செய்தவர்களில் ஒரு பணியாளருக்கு 100 ரூபாயும் இன்னொருவருக்கு 150 ரூபாயும் சம்பளம். ஆனால் இருவருக்கும் ஒரே வேலைதான். குறைந்த சம்பளம் வாங்கியவர் இது பற்றி சிவாஜியிடமே கேட்டுவிட்டான். அப்போது வாசலில் ஏதோ சப்தம் கேட்டது. சிவாஜி அந்த பணியாளனிடம் வாசலில் சத்தம் கேட்கிறது போய் பார்த்து வா என்றான். அவன் போன வேகத்தில் திரும்பி வந்தான். ராஜா ஒரு யானை போய்க்கொண்டிருக்கிறது என்றான். அது என்ன யானை? என்றார் சிவாஜி. இவன் திரும்பவும் போய் வந்து ஆண் யானை மகாராஜா என்றான். அதன் விலை என்ன? என்றதும் திரும்ப யானைக்காரனை பார்க்க ஓடினான் பணியாளன். இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் ஓடி ஓடி சென்று பார்த்துவர வேண்டியதாயிற்று.

சிவாஜி அடுத்த பணியாளனை அழைத்தார். வாசலில் சத்தம் கேட்கிறது. பார்த்து வா என்றார். அவன் சற்று நேரத்தில் திரும்பி வந்தான். மகாராஜா அங்கே ஒரு ஆண் யானை போகிறது. மிகுந்த லட்சணமானது. தந்தத்தின் நீளம் மட்டும் ஐந்தடி இருக்கும். விலை ஆயிரம் பொன் பெறும் என்று விவரமாக எடுத்துரைத்தான். சிவாஜி முதல் பணியாளனை ஒரு பார்வை பார்த்தார். அதன் பிறகு அவனிடம் கூலி பற்றி வாய் திறக்கவே இல்லை.

இன்றைய செய்திகள்

07.12.19

* பள்ளிப் பாடத் திட்டத்தில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு குறித்த கையேட்டை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லியில் அறிமுகப்படுத்தினார்.

* 21 வயதான தீப்தி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பொறுப்பேற்று வனத்துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

* நிபா நோயாளிக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த கேரள செவிலியருக்கு ‘ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’ வழங்கி வியாழக்கிழமை கௌரவிக்கப்பட்டார்.

* ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ். லக்‌ஷ்மி நடுவராகப் பணியாற்றவுள்ளார். சர்வதேச ஆடவர் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவர் ஒருவர் பணியாற்றவுள்ளது இதுவே முதல்முறை.

* தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை நிலவரப்படி 58 தங்கம், 41 வெள்ளி, 19 வெண்கலம் என 118 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது இந்தியா.

Today's Headlines

🌸Chief Minister Arvind Kejriwal in Delhi today launched a book on Ambedkar biography in the school curriculum.

 🌸 21-year-old Deepti  has become the first transgender person to work in the forest department as a junior assistant in the district forest office at  Ooty, in Nilagiri.

 🌸The Florence Nightingale Award was presented to the Kerala nurse who died after being treated for Niba's disease on Thursday.

  🌸Lakshmi will serve as umpire In  ICC Men's Cricket World Cup to be held in the United Arab Emirates This is the first time a female umpire will serve in an international men's cricket match.

 🌸 🌸As per the report on Thursday in South Asian Sports meet India bagged 58 gold medals, 41 silver medals, 19 bronze as a whole total 118 medals and continues to be in the top list.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One