கடந்த ஜூலை 12 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை நடந்த குருப்- 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை தேர்வாணையம் இன்று வெளியிட்டது.
துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 உயர் பதவிக்கான பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளை
http://www.tnpsc.gov.in/results.html/
என்ற அரசு இணையதளத்தில் பார்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 23 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment