திருக்குறள்
அதிகாரம்:துறவு
திருக்குறள்:343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
விளக்கம்:
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
பழமொழி
A guilty conscience needs no accuser
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.
2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்
பொன்மொழி
அன்பு இல்லாத மனிதம் பற்றற்ற நிலைக்கு மாறும். ஞானமில்லாத பலனைத் தரும்
.....கண்ணதாசன்
பொது அறிவு
1. தாஜ்மஹாலை உருவாக்கிய தலைமை சிற்பி யார்?
இஸ்தாக் உஸ்தாத்.
2. வாஸ்கோடகாமாவின் கல்லறை எங்கு உள்ளது?
கேரளாவிலுள்ள கொச்சியில்.
English words & meanings
• Embryology – study of embryos. முளையவியல் - தாயின் கர்ப்பத்தில் கரு உருவாகி வளர்ந்து வருவது குறித்த அறிவியல் பிரிவு.
• Eager - ஆவலுள்ள
ஆரோக்ய வாழ்வு
முள்ளங்கி சாறுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண் வாய் புண் குணமாகும்.
Some important abbreviations for students
IMO - In My Opinion
IRL - In Real Life
நீதிக்கதை
இதுதான் பார்வை!
ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அவ்வழியாக வந்த ஒருவன், ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை என்றார். சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான். அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான் என்றார்.
மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள் என்று பணிவோடு கூறினான். உடனே துறவி, மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத் தான் கேட்டனர். என்றார்.
மிகவும் வியந்த அரசன், துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான். அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும். முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது. ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள் என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.
இன்றைய செய்திகள்
13.12.19
◆குரூப்-1 நேர்முகத் தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்கும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
◆வைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு.
◆டிசம்பர் 2019 கணக்கெடுப்புப்படி நாடு முழுவதும் 344 தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
◆காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
◆சென்னை சேப்பாக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் சில வீரர்கள் இன்று சென்னை வந்து சேர்ந்தனர்.
◆ஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
Today's Headlines
*TNPSC announces that the interview for Group-1 candidates will be conducted on the scheduled date.
*No objection to release water from vaigai dam for kiruthumal river ordered Highcourt.
*As per december 2019 census, 344 autonomous universities are functioning in India declares the HRD minister Ramesh Pokhriyal.
*Greta Thunberg, who continuously voices against climatic changes is selected as the best person in 2019 by the Times Magazine.
*Some Indian players under the captainship of Virat Kohli reached chennai today for the one day match to be held on coming sunday in chennai chepauk stadium.
*Indian cricket's vice captain Rohith Sharma is appointed as India's first ambassador for Spain's famous football league La Liga.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment