மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும் பயமின்றியும் எழுதும் வகையில் Pariksha Pe Charcha 2020 எனும் நிகழ்ச்சி மூலம் பாரதப் பிரதமர் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் 16 . 01 . 2020 அன்று புதுடில்லியில் உள்ள Talkatora ஸ்டேடியத்தில் உரையாற்றவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க , பார்வை ( 3 ) ல் காணும் கடிதம் மூலம் பள்ளி மாணாக்கர்கள் கட்டுரைகளை இணையதள வழியில் சமர்ப்பித்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது .
இதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 16 . 01 . 2020 அன்று புதுடில்லியில் உள்ள Talkatora ஸ்டேடியத்தில் பாரதப் பிரதமர் அவர்கள் உரையாற்றவுள்ளதை அனைத்து தூர்தர்ஷன் மற்றும் வானொலி மூலம் நேரடியாக ஒளிப்பரப்பப்பட உள்ளது . இதனை பிரதம மந்திரி அலுவலக இணையதளங்கள் தவிர்த்து தகவல் தொழில் நுட்பத்தில் நேரலை தளங்களான Youtube Channel of MHRD . Mygov . in , Facebook Live and Swayamprabha Channels of MHRD மூலமும் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . தற்போது ஏறக்குறைய அனைத்து வகைப் பள்ளிகளும் தொலைக்காட்சி சாதனம் மற்றும் மின் இணைப்பு வசதி பெற்றுள்ள நிலையில் , 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவியர்கள் இந்நிகழ்ச்சியினை தவறாது காணும் பொருட்டும் / கேட்கும் பொருட்டும் தொலைக்காட்சிபெட்டி மற்றும் இதர சாதனங்கள் பழுது நீக்கம் செய்தும் , அன்றைய நாள் முழுவதும் தொடர்
மின் விநியோகம் பெறும் பொருட்டு செயனரேட்டர் / கன்வெர்ட்டர் ( Generailors / Inverlers ) வசதிகளை செய்து கொள்ள Sanmigr : : Shiksha வின் திட்ட நிதியினை பயன்படுத்துமாறும் , இந்நிகழ்ச்சி குறித்த பின்னூட்டம் ( Icellhick ) அவிக்குமாறும் அனைத்து udraத் தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
அனைத்து பள்ளி மாணவ ! மாணவியர்களும் தவறாது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை காண்பது / கேட்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
No comments:
Post a Comment