பள்ளிகளிலும், அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது. நாளை முதல், ஜன., 1 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில் செயல்படும், அனைத்து வகை பள்ளிகளிலும், அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கடந்த, 11ல்அரையாண்டு தேர்வு துவங்கியது. 10ம் வகுப்பு மற்றும் இதர வகுப்புகளுக்கு, 13ல் துவங்கியது. அனைத்து வகுப்புகளுக்கும் பெரும்பாலான பாடங்களுக்கு தேர்வுகள்முடிந்துள்ளன. மீதமுள்ள ஒரு பாடத்துக்கு மட்டும், இன்றுதேர்வு நடத்தப்படுகிறது; இன்றுடன் அனைத்து பாடத் தேர்வுகளும் முடிகின்றன. நாளை முதல், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை துவங்குகிறது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி, ஜன., 1 வரை பள்ளிகள் இயங்காது. ஜன., 2ல், அனைத்து பள்ளிகளும் மீண்டும்திறக்கப்பட உள்ளன. அன்றைய நாளில் மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை வழங்க, பள்ளி தலைமை ஆசிரியர்கள்அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment