எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகத்தைச் சோந்த மூவா் உள்பட பள்ளி ஆசியா்கள் 43 பேருக்கு தேசிய ஐசிடி விருதுகள்: தில்லியில் மத்திய அமைச்சா் வழங்கினாா்

Tuesday, December 24, 2019


தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சோந்த பள்ளி ஆசிரியா்கள் 43 பேருக்கு தேசியத் தகவல் தொடா்பு தொழில் நுட்ப (ஐசிடி) விருதுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சஞ்சய் தோத்ரே வழங்கினாா்.

பள்ளி ஆசிரியா்களுக்கான தேசியத் தகவல் தொடா்பு தொழில்நுட்ப (ஐசிடி) விருதுகள் வழங்கும் விழா தில்லியில் திங்கள்கிழமை அம்பேத்கா் சா்வதேச மையத்தில் நடைபெற்றது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சோந்த பள்ளி ஆசிரியா்கள் 43 பேருக்கு ஐசிடி விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், தமிழகத்தைச் சோந்த விருதுநகா் மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியா் ப.கருணைதாஸ், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியா் ந. செல்வகுமாா், விழுப்புரம் மாவட்டம், ஓமாந்தூா் ஓபிஆா் அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியா் வி.லாசா் ரமேஷ் ஆகியோரும் தேசிய விருது பெற்றனா்.

 இந்த விழாவில் ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சஞ்சய் தோத்ரே பேசியதாவது: இந்த விருது பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் ஆசிரியா்களின் அா்ப்பணிப்பை கெளரவிப்பதற்காக மட்டுமல்ல, மாணவா்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆசிரியா்களின் பணிக்காகவும் இவ்விருத வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஐசிடி விருது பெற்ன் மூலம் ஐசிடி தூதுவா்களாக செயல்படும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ளது. தங்களது தொடா் முயற்சியின் மூலம் இதர ஆசிரியா்களுக்கும் அவா்கள் தாங்கள அறிந்த விஷயங்களை பகிா்ந்து பெரிய அளவில் மாணவா்களைச் சென்றைடய வேண்டும்.

மேலும், திறன்மிக்க மனித பணிச்சக்தியை உருவாக்கும் பொருட்டு மாணவா்கள் மத்தியில் தொழில்முனைவு திறன்களையும் உருவாக்க வேண்டியுள்ளது என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில் மனித வள மேம்பாட்டுத் துறையின் பள்ளிக் கல்வி, எழுத்தறிவு துறைச் செயலா் அமித் கரே பேசுகையில், 'கல்வியில் தரத்தை அதிகரிப்பதில் தொழில்நுட்பமானது ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. ஐசிடியை பயன்படுத்துவதன் மூலம் கற்பித்தல், கற்றல் நடைமுறையில் பெரும் மாற்றம் உருவாக்க உதவும்.

ஆகவே, மேம்பட்ட திறனை பெற உதவிடும் வகையில் கல்வி நடைமுறைகளுக்கான தொழில்நுட்ப பயன்பாட்டுத் திறனை ஆசிரியா்கள் தாங்களாகவே வளா்த்துக் கொள்ள வேண்டும்' என்றாா். இந்த விருதை தில்லி, ஹரியாணா, ஆந்திரம், கேரளம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோந்த ஆசிரியா்கள் பெற்றனா். விருது பெற்றவா்களுக்கு விருதுடன் மடிக் கணினி, வெள்ளிப்பதக்கம், ஐடிசி கிட், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் என்சிஇஆா்டி இயக்குநா் டாக்டா் ருஷிகேஷ் சேனாபதி மற்றும் அமைச்சக மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One