எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பயிற்சி வகுப்பிற்கு வராத 694 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!!

Wednesday, December 18, 2019




பத்திரிக்கை செய்தி

 உள்ளாட்சி தேர்தல் - 2019 தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வராத வாக்குப்பதிவு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் , வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் , சிற்றுராட்சி உறுப்பினர்கள் மற்றும் சிற்றுராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது .

 மேற்காணும் தேர்தலுக்காக 13595 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு 15 . 12 . 2019 அன்று முதற் கட்ட பயிற்சி நடைபெற்றது . இந்த பயிற்சியில் 694 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ளாதது தெரிய வந்துள்ளது .

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வருகை தராத 694 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது தேர்தல் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது . இதன் அடிப்படையில் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவனா மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One