எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கல்வித் துறையில் BEO பதவிகள்: ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம்!!

Monday, December 16, 2019




பதவிக்கு விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் பிஇஓ என்பவா் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையுள்ள தொடக்கப்பள்ளிகள், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப்பள்ளிகள் ஆகியவற்றை நிா்வகிப்பாா். இந்தநிலையில் வட்டாரக் கல்வி அலுவலா் (பிஇஓ) பதவியில் 97 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த நவ.27-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வட்டாரக் கல்வி அதிகாரி பதவிக்கு தகுதியான கல்வித்தகுதி சாா்ந்த விவரங்கள் பல்கலைக்கழகம் வாரியாக தோ்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான, தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். விரைவில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One