எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வாக்காளர், வேட்பாளர் அல்லது தேர்தல் பணியாளர் அனைவருக்குமான ஆன்ட்ராய்டு தேர்தல் செயலி!

Wednesday, December 25, 2019




அனைவருக்குமான ஆன்ட்ராய்டு தேர்தல் செயலி.

நாம் அனைவரும் வாக்காளர், வேட்பாளர் அல்லது தேர்தல் பணியாளர் என தேர்தலோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு கொண்டுள்ளோம். அனைவருக்குமான தகவல்களையும், சேவைகளையும் உள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் ஒரு தேர்தல் செயலியை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

செயலியின் முகப்பு நீங்கள் வாக்காளரா? வேட்பாளரா? அல்லது தேர்தல் பணியாளரா என வினவி அதற்கேற்ப உங்களுக்குத் தகவல்களை அளிக்கிறது.

வாக்காளர் -

உங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளவும், உங்கள் வாக்குச்சாவடியை அறியவும், வாக்காளர் பட்டியலை பதிவிறக்கிக் கொள்ளவும் வசதிகள் தரப்பட்டுள்ளது. வாக்காளர் கடமைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. புகார்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்களும் தரப்பட்டுள்ளது.

வேட்பாளர் -
வேட்பாளர்களுக்கான படிவங்கள் மற்றும் கையேடு இணைக்கப்பட்டுள்ளது. தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் தரப்பட்டுள்ளது. இது தவிர அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புகளும், செய்திகளும் இணைப்பின் வழியே வழங்கப்படுகிறது.

தேர்தல் பணியாளர் -

நீங்கள் தேர்தல் பணியாளர் என்றால் உங்களுக்கு இது மிகவும் அவசியமான செயலியாகும்.  வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கடமைகளும், அவர்களுக்கான பணிகளும், சுருக்கமாக, பொருத்தமான தலைப்பிட்டு விளக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான கையேடு, காணொலிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களின் தொடர்பு எண்கள் தரப்பட்டுள்ளன.  தேவையான படிவங்களும் pdf வடிவில் இணைக்கப்பட்டுள்ளன.  வாக்குப்பெட்டியை அறிவோம் என்ற பிரிவில் வாக்குப்பெட்டியை கையாளும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. அசைவூட்டப்பட வடிவிலும் வாக்குப்பெட்டியை கையாளும் முறை விளக்கப்பட்டிருப்பது சிறப்பு. அவ்வப்போது செய்திகளும், அறிவிப்புகளும் இணைப்பின் வழியே பகிரப்படுகின்றன.
நீங்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தால், தேர்தல் சமயத்தில் உங்கள் செல்பேசியில் அவசியம் இருக்க வேண்டிய செயலி இது.

மொத்தத்தில் அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட அருமையான தேர்தல் செயலி இது. தஞ்சை மாவட்டம் மட்டுமன்றி அனைவருக்கும்  இச்செயலி பயன்படும்.

கூகுள் ப்ளே ஸ்டோர் இணைப்பு

https://play.google.com/store/apps/details?id=com.priyammedia.thanjavurelection&hl=en

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One