எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேர்வின் போது பள்ளிகளில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்!

Tuesday, December 17, 2019




தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் அரையாண்டுப் பொதுத் தேர்வு நடைபெற்றுவருகிறது . தேர்வின் போது கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் பின்வருவாறு

# 10 , 11 , மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வினை நடத்துவதைப்போல , அனைத்து வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வினையும் , தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தனித்தனி அறைகளில் ( அறைக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் ) முழு கண்காணிப்புடனும் , எவ்வித புகாருக்கும் இடமளிக்காமலும் நடத்தவேண்டும் .

# அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் .

# தேர்வுப்பணியில் இல்லாத ஆசிரியர்கள் , தேர்வு இல்லாத மாணவர்களை அடுத்த தேர்விற்கு தயார் செய்தல் வேண்டும் .

# தேர்வு அறைக்கு எக்காரணத்தைக் கொண்டும் ஆசிரியர்கள் கைப்பேசி கொண்டு செல்லுதல் கூடாது . அவ்வாறு ஆசிரியர்கள் கைப்பேசியுடன் அறைக்கண்காணிப்பு பணியை மேற்கொள்வது கண்டறிப்பட்டால் அதற்கு தலைமையாசிரியரே முழு பொறுபேற்க வேண்டும் .

# வட்டாரக் கல்வி அலுவலர்கள் / குறுவளமைய தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அரையாண்டுப் பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகளை பார்வையிட்டு எவ்வித புகாருக்கும் இடமின்றி தேர்வு நடைபெறுவதை உறுதி செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

# மாவட்டக் கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களை பார்வையிட்டு இவ்வலுவலகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One