எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிக்கான அலாரம் ஒன்றைக் கண்டுபிடித்த அரசுப்பள்ளி மாணவன் -மாவட்ட ஆட்சியர் பாராட்டு

Wednesday, December 11, 2019


திருப்பூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிள்ளிவளவன் - கனிமொழி தம்பதியின் இரண்டாவது மகன் இனியன். பெருமாநல்லூர் அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், வீட்டில் உபயோகப்படுத்தப்படும் பொருள்களை வைத்து பள்ளிக்கான அலாரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

 இனியனின் கண்டுபிடிப்பு
அவரது எளிய கண்டுபிடிப்பை தங்கள் பள்ளியில் உபயோகிக்கவுள்ளதாக பெருமாநல்லூர் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தச் சிறுவனின் கண்டுபிடிப்பைப் பார்த்து வியந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நேரில் வரவழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இனியனிடம் பேசினோம்.

``என் அப்பா மைக் செட் கடையை நடத்தி வருகிறார். பள்ளி நேரம் போக மீதமுள்ள நேரமெல்லாம் கடையில்தான் இருப்பேன்.


அங்கு இருக்கும் பொருள்களைப் பார்த்துப் பார்த்து ஏதேனும் செய்ய வேண்டும் என்ற யோசனை வரும். அவ்வப்போது எனக்குக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு சிறிய சிறிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவேன்' எனக் கூறிய அவர் தொடர்ந்து தன் பள்ளி அலாரம் கண்டுபிடிப்பு பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

இனியனின் கண்டுபிடிப்பு
" ஒருநாள் சாக்பீஸ் எடுப்பதற்காகச் சென்றேன். அந்த அறைக்கு அருகில் இருக்கும் அலாரம் பழுதாகி இருந்தது. அதைக் கண்டதும் அருகில் சென்று அதை எப்படிச் செய்துள்ளனர் எனக் கவனித்தேன். எங்கள் வீட்டிலும் அலாரம் செய்வதற்குத் தேவையான அனைத்து பொருள்களும் இருந்தன. நாமே ஏன் புதிதாகச் செய்யக்கூடாது என யோசித்து வீட்டில் உள்ள பொருள்களை வைத்து புதிய அலாரத்தைக் கண்டுபிடித்தேன்.

மூங்கில் குச்சி, கார் மோட்டார், போன் சார்ஜர், இரும்பு நட், பாத்திரம் இதை வைத்தே அலாரத்தை செய்துவிட்டேன். மோட்டார் சுற்றும்போதும் அதில் வைத்துள்ள நட், பாத்திரத்தின் மீது படும். அப்போது ஒலி உண்டாகும். என் கண்டுபிடிப்பைப் பற்றி அறிந்த திருப்பூர் கலெக்டர் நேரில் அழைத்தார். என் கண்டுபிடிப்பையும் உடன் கொண்டு சென்றிருந்தேன். அதை வாங்கிப் பார்த்துவிட்டு, `இதை எப்படிச் செய்தாய்?' என ஆச்சர்யத்துடன் கேட்டார், நான் விளக்கம் அளித்தேன்.





மாவட்ட ஆட்சியருடன் மாணவர் இனியன்
பின்னர், `அலாரம் சிறப்பாக உள்ளது, வாழ்த்துகள்' எனக் கூறி புத்தகம் பரிசாக அளித்தார். `நீ இன்னும் நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்' எனப் பாராட்டி 10,000 ரூபாய் பணம், சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை வழங்குவதாகத் தெரிவித்தார். இப்படியொரு பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை" என நெகிழ்ந்தவர்,

மாணவர் இனியன்என் கண்டுபிடிப்பைப் பற்றி அறிந்த திருப்பூர் கலெக்டர் நேரில் அழைத்தார். பள்ளி அலாரத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, `இதை எப்படிச் செய்தாய்?' என ஆச்சர்யத்துடன் கேட்டார்.
`` இதுமட்டுமல்லாமல் சோலார் பேனல், பென் ட்ரைவ் மூலம் இயங்கும் விண்ட் மில் போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளேன். வருங்காலத்தில் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளராக வர வேண்டும் என்பதே என் லட்சியம்" என்றார் உற்சாகக் குரலில்.

`தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்' என்பார்கள். பள்ளியில் பழுதாகியிருந்த அலாரத்துக்கு மாற்றாகப் புதிதாக ஒன்று தேவைப்படுகிறது என எண்ணியதே மாணவனின் கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக இருந்தது என்கின்றனர் பெருமாநல்லூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One