வட்டாரக் கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் 13 / 2019 நாள் 27 . 11 . 2019 அன்று வெளியிடப்பட்டது . இணையவழி வாயிலாக விண்ணப்பத்திணை விண்ணப்பதாரர்கள் 19 . 12 . 2019 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 09 . 01 . 2020 மாலை 5 . 00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . தற்போது உள்ள நடைமுறைகளின்படி இணையவழி வாயிலாக விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
எனவே அறிவிக்கையினை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்து கொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்திடவும் பணிநாடுநர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால் எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கபட மாட்டாது . எனவே உரிய காலத்திற்குள் விண்ணப்பங்களை உரிய விண்ணப்ப கட்டணங்களுடன் செலுத்தி விண்ணப்பித்திட பணிநாடுநர்கள் இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
Click Here - BEO Post - Online Application - Direct Link
No comments:
Post a Comment