திருக்குறள்
திருக்குறள் : 364
அதிகாரம் : அவாஅறுத்தல்
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
பொருள் :
மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
பழமொழி
Measure thrice before you cut once
ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.
2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.
பொன்மொழி
மனசாட்சிக்கு எதிராக எதையும் செய்வது பாதுகாப்பானது அல்லது விவேகமானது அல்ல.
✒ மார்ட்டின் லூதர்
பொது அறிவு
1.இந்தியாவில் தேன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
பஞ்சாப்.
2.தங்கத்தை கரைக்கும் கரைப்பான் எது?
அகுவா ரிஜியா.
English words & meanings
Abstracted - not giving attention to what is happening around. வேறு சிந்தனை உடைய
Aquarium - a glass container filled with water, in which fish and water animals can be kept- நீர்வாழினக் காட்சிக் கலன்.
ஆரோக்ய வாழ்வு
கரும்பில் பொட்டாசியம்,
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. கரும்பு சிறுநீரக தொற்று,தொண்டை புண் சரி செய்யும்,கொழுப்பை குறைக்கும்.
Some important abbreviations for students
AQI - Air Quality Index.
MLRS - Multiple Launch Rocket System
நீதிக்கதை
தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்
கழுதையின் தந்திரம்
குறள் :
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
விளக்கம் :
முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.
கதை :
ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.
ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.
ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம், நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும் என வேண்டிக் கொண்டது.
நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல் என உறுமியது ஓநாய். ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.
காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கழுதை கூறிற்று.
ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது. கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது.
கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.
நீதி :
கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக செயல்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
27.01.20
* தமிழக காவல்துறையைச் சோ்ந்த 24 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் விருது கிடைத்துள்ளது.
* அமெரிக்காவின் ஹாா்வாா்டு பல்கலைக்கழகத்தில் 17-ஆவது வருடாந்திர இந்திய மாநாடு அடுத்த மாதம் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
* ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தொடரும் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் 40 ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்.
* நியூஸிலாந்து டெவலப்மெண்ட் ஹாக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
* நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Today's Headlines
🌸24 Tamil Nadu police officers have received the presidential title award.
🌸 The 17th Annual Indian Conference is being held on the 15th and 16th of next month at Harvard University, USA.
🌸 Resolution has been passed at 40 municipal village council meetings across Tamil Nadu against the hydrocarbon project.
🌸The Indian women's team beat the New Zealand Development Hockey team for 4-0.
🌸 India won the 2nd T20 match against New Zealand by 8 wickets.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment