எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ATSL 2020 சோதனைத் தேர்வு வழிகாட்டுதல்கள்

Friday, January 24, 2020




* ATSL 2020 தேர்வு வினாத்தாளின் புறவயத் தன்மை , தேர்வை மாணவர் அணுகும் முறை ஆகியவற்றைப் பரிசோதிப்பதற்காக Pilot தேர்வு கடந்த மாதம் 08 . 12 . 2019 அன்று மாநிலம் முழுவதும் 8 மாவட்டங்களில் 48 பள்ளிகளில் நடத்தப்பட்டது .

* Pilot தேர்வில் மாணவர் பங்கேற்பும் , தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் ஈடுபாடும் பாராட்டத் தக்க வகையில் இருந்தது . இதனைத் தொடர்ந்து - Pilot தேர்வில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள கணினி மற்றும் தொழில்நுட்ப வளங்களின் முழு திறனையும் சோதிக்க சோதனைத் தேர்வு 24 . 01 . 2020 ஒரு நாள் மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .

* இதற்காகப் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களால் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .

* இதன் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளைச் சரிபார்க்கும் வகையிலும் , Log in செய்தல் , Internet Speed மற்றும் இதரத் தொழில்நுட்ப வளங்களைச் சோதிக்கும் வகையிலும் சோதனைத் தேர்வு நடைபெற உள்ளது .

* இந்த சோதனைத் தேர்வு வரும் 24 . 01 . 2020 அன்று தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் . தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் . அனைத்துப் பள்ளிகளிலும் சரியாக 2 மணிக்குக்குத் தேர்வு தொடங்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் .

* அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து கணினி வளங்களையும் பயன்படுத்தும் வகையில் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மாணவர்களை தேவைக்கேற்ப அமரவைத்து இச்சோதனைத் தேர்வை நடத்த வேண்டும் .

* தம் பள்ளியில் உள்ள கணினி / மடிக்கணினி I Tab எண்ணிக்கைகு ஏற்ப மாணவ மாணவியரை இச்சோதனைத் தேர்வில் ஈடுபடுத்த வேண்டும் . தேர்வு நேரம் 90 நிமிடம் முடியும் வரை அச்சோதனைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் .




No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One