Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கல்வி ஆண்டில் திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ள 8 , 51 , 999 மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு நடத்தப்பட உள்ளது . அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இறுதித் தேர்விற்கு முன்பாக ( Pilot Test ) முன் மாதிரி நாட்டமறித் தேர்வு 8 மண்டலங்களில் ( திருவள்ளூர் , ஈரோடு , கடலூர் , சிவகங்கை , கிருஷ்ணகிரி , நாகை , திண்டுக்கல் , திருநெல்வேலி ) ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் 08 . 01 . 2020 நடத்தப்பட்டது . இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் பயிற்சிக்காக TNTP / EMIS இணையதளத்தில் மாதிரி வினாத்தாட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது .
ATSL 2020 முதன்மைத் தேர்வு ஜனவரி 30 , 31 மற்றும் பிப்ரவரி 1 ந் தேதி ஆகிய மூன்று நாட்களில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ளது .
தேர்வு நேரம்
* Session 1 : காலை 9 . 00 மணி முதல் 1 . 00 மணி வரை
* Session II : பிற்பகல் 2 . 00 மணி முதல் 6 . 00 மணி வரை
இத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து குழுக்கள் அமைத்து செயல்பட ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .
மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் . அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அவ்வப்போது இதுகுறித்து வழங்கப்படும் அறிவுரைகளைக் கவனத்தில் கொண்டு தேர்வை நல்ல முறையில் நடத்தி முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .
No comments:
Post a Comment