கழிப்பறையைவிட 20 மடங்கு அசுத்தமானது உங்கள் டிவி ரிமோட்!
சொன்னால் நம்ப முடியாமல்தான் இருக்கும், ஆனால், அதுதான் உண்மை என்று தெரிவிக்கிறது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்று.
வீட்டில் எல்லா நேரங்களிலும் எல்லாருடைய கரங்களிலும் சுழன்று வந்துகொண்டிருப்பது டிவி ரிமோட். ஆனால், அதனுடைய லெவல் அப்படித்தான் இருக்கிறதாம்.
இந்த ஆய்வில் பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
குப்பைத் தொட்டி, படுக்கையறைத் தரைவிரிப்பு, டிவி ரிமோட், கழிப்பறை அமர்விடம் என்று பலவற்றிலும் கிருமி, யீஸ்ட் மற்றும் பூஞ்சைகள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டது.
இருப்பதிலேயே மிகவும் அசுத்தமாக இருந்தது டிவி ரிமோட்தான். ரிமோட்டில் இருந்த கிருமிகள், யீஸ்ட் ஆகியவற்றின் அளவு ஒரு குறிப்பிட்ட பரப்பில் 290 அலகுகளாக இருந்தது. ஒப்பிட்டுப் பார்த்தால், கழிப்பறை அமர்விடத்தில் 12.4 அலகுகள் மட்டுமே.
ஆய்வு நடத்தியவர்களுக்கே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சித் தகவல் இது.
கழிப்பறையைவிட எட்டு மடங்கு அசுத்தமாக இருக்கிறது உங்களுடைய ஸ்மார்ட் கடிகாரம் என்றோர் ஆய்வு முடிவு வெளியான நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அடுத்த அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
ரிமோட்டைத் தொடாமலிருப்பது நல்லது, தொட்டால் கைகழுவிக் கொள்வது மிகவும் நல்லது அல்லது குறைந்தபட்சம் இயன்றவரை ரிமோட்டைச் சுத்தமாகப் பராமரிக்கப் பார்ப்பது நல்லது.
No comments:
Post a Comment