அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2015ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் நேரடி நியமனம் மூலம் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்து ஆணைகள் வழங்கப்பட்டன . பார்வை ( 2 ) - ல் காணும் கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு 27 . 07 . 2015 முதல் உதவிப் பேராசிரியர்களாக அரசு கல்லூரிகளில் பணியில் சேர்ந்தவர்கள் சார்பில் முழுத் தகுதி சான்றிதழ் வழங்க ஏதுவாக சார்ந்த உதவிப் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை சரிபார்த்து முழுத் தகுதி பெற்றுள்ளனர் எனச் சான்றளிக்குமாறு அந்தந்த கல்லூரி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர் .
கடிதத்துடன் பெறப்பட்ட இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர்களின் கருத்துரு பரிசீலிக்கப்பட்டு சார்ந்த கல்லூரி முதல்வரின் பரிந்துரை மற்றும் சான்றினை ஏற்று , அதனடிப்படையில் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர்களுக்கு அப்பாடத்துறையில் உதவிப்பேராசிரியருக்கான முழுத் தகுதி பெற்றவர்கள் எனச் சான்றளிக்கலாகிறது . இதில் பின்னாளில் தவறு ஏதும் கண்டறியப்படின் சார்ந்த உதவிப் பேராசிரியர்கள் மற்றும் சார்ந்த கல்லூரி முதல்வர்களே முழுப் பொறுப்பு எனவும் தெரிவிக்கலாகிறது .
No comments:
Post a Comment