தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்தாண்டு டிச. 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய, மாவட்ட தலைவர், ஒன்றிய, மாவட்ட, ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜன. 11-ல் நடைபெற்றது.
ஜன. 11-ல் நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது பிரச்சனை ஏற்பட்டதால் பல்வேறு மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி உட்பட106 பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனவரி 11, 30ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு மறைமுகத் தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
ஒத்திவைக்கப்பட்ட மறைமுக தேர்தலானது காலை 10.30 மணிக்கு ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர், பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment